/* */

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை வென்றது இந்தியா, குருப் 2ல் டாப்

டி20 உலகக்கோப்பை குருப் 2 ஆட்டத்தில், இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது

HIGHLIGHTS

டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேவை வென்றது இந்தியா, குருப் 2ல் டாப்
X

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தனது குரூப்பில் முதல் இடத்துக்கு முன்னேறி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள நினைக்கும். ஒருவேளை இந்திய அணி இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் குரூப் 2ல் 2வது இடத்துக்கு சரிந்து அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.

இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 26 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில்6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாட தொடங்கியது

ஆரம்பமே ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்திலேயே துவக்க ஆட்டக்காரர் மாதவேரே புவனேஸ்வர் பந்து வீச்சில் விராட் கோலியிடம் காட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் சகாப்வா டக் அவுட் ஆனார். அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

பின்னர் களமிறங்கிய ராஸா- பர்ல் ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 6 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து மிரட்டியது. ஆனால், அடுத்து பந்துவீச வந்த அஷ்வின் சுழலில் பர்ல் அவுட்டாக ஜிம்பாப்வேவின் சரிவு தொடங்கியது. அஷ்வின் 3 விக்கெட்டுகள் வீழ்த்த ஜிம்பாப்வே அணி 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

Updated On: 9 Nov 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ.
  2. காஞ்சிபுரம்
    வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர்...
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே வையாவூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மூதாட்டி...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் உலக இரத்த தான விழிப்புணர்வு பேரணி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டம்; 5 தாலுகாக்களில் ஜமாபந்தி துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் காலிஃபிளவர் பரோட்டா செய்வது எப்படி?
  8. நாமக்கல்
    ஜல்ஜீவன் குடிநீர் திட்டத்தில் சிறப்பான செயல்பாடு; நாமக்கல்...
  9. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா ஒரு "பலாப்பழம்"..! எப்படி?
  10. இந்தியா
    குழந்தை பருவ காதலிக்காக வேலை கேட்டு உருக்கம்: சிஇஓ பதிவு வைரல்