ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
X

 ஜப்பானை வீழ்த்தியது இந்தியா- மாதிரி படம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் அணி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. ஜப்பானை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய ஆடவர் அணி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஆக்கி லீக் சுற்றுகள் நடைபெற்றது. லீக் சுற்றின் 27-வது போட்டியில் ஜப்பான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய 13-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 17-வது நிமிடத்தில் இந்திய வீரர் குர்ஜந்த் சிங் ஒரு கோல் அடித்தார். இதனால், இந்திய அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது.

தொடர்ந்து ஆட்டத்தின் 2-வது கால் பகுதியில் 19-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் டனகா கோல் அடித்து தனது நாட்டு அணிக்கு கோல் கணக்கை தொடங்கி வைத்தார். ஆட்டத்தின் 3-வது கால் பகுதியில் 33-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் ஹுடனபி ஒரு கோல் அடித்தார்.

இதனால், ஜப்பான் அணியின் கோல் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் என சமநிலையில் இருந்தன. இதனால், ஆட்டம் சூடுபிடித்தது. இதனை தொடர்ந்து இந்திய ஆண்கள் அணியினர் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்தனர்.

ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் ஷம்ஷர் சிங்கும், 51-வது நிமிடத்தில் நீலகண்ட ஷர்மாவும் தலா 1 கோல் அடித்தனர். பெனால்டி கார்னர் முறை மூலம் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. இதனால், இந்திய அணியில் கோல் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் முராடா ஒரு கோல் அடித்தார். இதனால், அந்த அணியின் கோல் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. இறுதியில் ஜப்பானை 5-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!