ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கையை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இந்த இறுதி போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் மோதி வருகின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங் தொடங்கிய முதல் ஓவரிலேயே இலங்கை வீரர்கள் இருவர் அவுட் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து இலங்கை விக்கெட்டுகள் மள மள என சீட்டுக்கட்டு போல் சரிய ஆரம்பித்தது. அதிரடி ஆட்டக்காரர்கள் கூட சிங்கிள் டிஜிட் ரன்னில் அவுட் ஆனது இலங்கை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.

15 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாக நின்றது இலங்கை அணி. ஒரு சில சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட ஜீரோ ரன்னில் அவுட் ஆகி வெளியே சென்றார்கள். பலர் சிங்கிள் டிஜிட்டில் இருந்தார்கள். ஒரு சிலர் மட்டுமே டபுள் டிஜிட் எண்களை தொட்டார்கள்.

இறுதிப்போட்டி என்பதால் இலங்கை பிரேமதாசா ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. உள்ளூர் என்பதால் இலங்கை ரசிகர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். ஆனால் இலங்கை அணி வீரர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.

இதனால் கேலரியில் இருந்த பல இலங்கை ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததை காண முடிந்தது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி எடுத்த மிக மோசமான ரன்கள் இது என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கோடு இந்திய அணி வீரர்கள் பந்தடிக்க தொடங்கினார்கள்.

இந்திய அணி வீரர்கள் எளிதாக 51 ரன்களை எடுத்து இலங்கைஅணியை வீழ்த்தினார்கள். இதன் காரணமாக இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றார்கள் .இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஆன இலங்கையிடம் இருந்து இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பறித்து எட்டாவது முறையாக ஆசிய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்று உள்ளது.

Tags

Next Story