ஆசிய கோப்பை தகுதிச் சுற்று: ஆப்கானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை தகுதிச் சுற்று: ஆப்கானை வீழ்த்திய இந்தியா
X
ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது

18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான 3-வது கட்ட தகுதி சுற்றின் 'டி' பிரிவு ஆட்டங்கள் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் தனது தொடக்க ஆட்டத்தில் கம்போடியாவை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்த இந்திய அணி நேற்று ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி 5 நிமிடங்கள் தான் முடிவை தீர்மானிப்பதாக அமைந்தது. 86-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி 20 யார்டுகளுக்கு மேல் இருந்து ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் வாய்ப்பில் பிரமாதமாக கோல் போட்டார். சர்வதேச கால்பந்தில் அவரது 83வது கோலாக இது அமைந்தது.

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஜுபைர் அமிரி தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றியது. கடைசி நிமிடத்தில் ஆஷிக் குருணியனின் அளித்த பாஸை இந்தியாவின் அப்துல் சமத் கோல் அடிக்க . முடிவில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை பெற்று பிரதான சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.

ஜூன் 14-ம் தேதி ஹாங்காங் அணிக்கு எதிரான தகுதிச் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது.

Tags

Next Story