தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங்

இரண்டாவது பந்தில் ஆட்டம் இழந்த ருத்ராஜ் கெய்க்வாட்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய தொடங்கியது.

இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங்கை தொடங்கியது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்களை கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா தலைநகர் ஜோகன்ஸ் பர்க்கில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அவர்களது சொந்த மண்ணிலேயே தென்னாப்பிரிக்காவை ஊதி தள்ளி வெற்றி பெற்றது. இதன் காரணமாக தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான இரண்டாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஹெபேகா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி முதலாவது பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் ருதுராஜ்கெய்க்வாட் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் களம் இறங்கினார்கள். முதல் ஓவரின் முதல் பந்தில் ருத்ராஜ் கெய்க்வாட் பந்தை பவுண்டரிக்கு விளாசி நான்கு ரன் சேகரித்தார். ஆனால் அடுத்த பந்தில் அவர் அவுட் ஆகிவிட்டார். இதனை தொடர்ந்து திலக் வர்மா களம் இறங்கினார்.

தொடர்ந்து சாய் சுதர்சனும் திலக் வர்மாவும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் பவுண்டரிகள் அடித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக ரன்களை சேகரித்தால் தென்னாப்பிரிக்கா அணி அதனை சேஸ் செய்து வெற்றி பெறுவது என்பது கடினம். அந்த வகையில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு முனைப்பில் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.

Tags

Next Story