உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா பேட்டிங்: 2 விக்கெட் இழப்பு

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா பேட்டிங்: 2 விக்கெட் இழப்பு
உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து விளையாடிக்கொண்டிருக்கிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா பேட்டிங்கை தொடங்கி உள்ளது. இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி தொடங்கியது. மொத்தம் பத்து அணிகள் கலந்து கொண்ட இந்த விளையாட்டுப் போட்டியில் இன்று இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங்கை தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. இதன் காரணமாக இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் இறங்கினார்கள். ரோகித் சர்மா வந்த பந்துகளை எல்லாம் பௌண்டரிக்கும், சிக்சிற்கும் விளாசிக் கொண்டிருந்தார்.ஆனால் சுப்மன் கில் சிங்கிள் டிஜிட் ரன்னில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். ஆனாலும் இந்திய வீரர்களின் தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. விராட் கோலி உள்ளே வந்தார். ரோகித் சர்மா 47 ரன்களில் கேட்ச் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் அய்யரும் கேட்ச் அவுட் ஆக கேஎல் ராகுல், விராட் கோலி ஜோடி சேர்ந்து விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

Tags

Next Story