காமன்வெல்த் போட்டிகள்: ஒரேநாளில் நான்கு பதக்கம் வென்ற இந்தியா

காமன்வெல்த் போட்டிகள்: ஒரேநாளில் நான்கு பதக்கம் வென்ற இந்தியா
X

இந்தியாவின் சாய்கோம் சானு மிராபாய், மையத்தில், மேரி மொரிஷியஸின் ரோல்யா ரனைவோசோவா, இடதுபுறம் மற்றும் கனடாவின் ஹன்னா காமின்ஸ்கி 

இங்கிலாந்தில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா ஒரே நாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியது.

தங்க பதக்கம் : காமல்வெல்த் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் மீராபாய் சானு 201 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். இங்கிலாந்தில் நடைபெறும் காமல்வெல்த் போட்டிகளில் இது இந்தியாவுக்கு முதல் தங்கமாகும்.

நேற்று நடைபெற்ற ஆடவருக்கான பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் சங்கத் மகாதேவ் சர்க்கார், மொத்தம் 248 கிலோ தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.

மகளிர் பளுதூக்குதலில் 55 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்த பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆடவருக்கான 61 கிலோ எடை பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜ் பூஜாரி மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப்பதக்கம் வென்றார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare