இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரா
X
கராராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் போட்டி இறுதி நாளன்று நேரம் முடிந்ததால் போட்டி டிராவில் முடிந்தது

கராராவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா- இந்தியா டெஸ்ட் போட்டி இறுதி நாளன்று நேரம் முடிந்ததால் டிராவில் முடிந்தது. இரண்டு அணிகளும் தலா இரண்டு புள்ளிகளைப் பெற்றன,.ஆஸ்திரேலியா மூன்று டி 20 களில் 6 புள்ளிகளுடன் பல்வேறு வடிவிலான தொடரில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

கடைசி நாளின் தேநீர் இடைவேளைக்கு பின் 272 ரன்களைத் துரத்திய ஆஸ்திரேலியா இரண்டு ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த போதிலும் டிரா செய்ய முன்வந்தது. டெஸ்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்தியாவின் கை ஓங்கியிருந்தாலும், முதல் இரண்டு நாட்களில் பெய்த மழை காரணமாக கணிசமாக வீசப்பட்ட ஓவர்களின் எண்ணிக்கையை குறைத்ததால் முடிவு கிடைக்கவில்லை

ஸ்மிருதி மந்தனா தனது முதல் டெஸ்ட் சதத்துடன் ஆட்டநாயகி விருது பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்டில் இந்தியாவிற்காக விளையாடியது நம்பமுடியாத அனுபவம் என்று இந்திய தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா தெரிவித்தார்.

டெஸ்ட் டிராவில் முடிந்த பிறகு, ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மேத்யூ மோட், மிதாலி ராஜ் தலைமையிலான அணியை ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியதை பாராட்டினார். "இந்தியா எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், நாங்கள் டாஸ் வென்றவுடன் அடித்து விளையாடலாம் என்று நினைத்தோம், விக்கெட் பசுமையாக இருந்தது. எங்களிடம் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர், ஆனால் நாங்கள் இலக்கை நிர்ணயிக்க தவறவிட்டோம். முதல் ஒரு மணிநேரத்தில் அவர்கள் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றார்கள். அங்கிருந்து நாங்கள் கொஞ்சம் பின்வாங்குவது போல் உணர்ந்தோம், "என்று கூறினார். .

"இந்தியா சிறப்பாக விளையாடியது. மந்தனாவின் இன்னிங்ஸ் பிரமாதமாக இருந்தது. ஆனால் போட்டியில் நாங்கள் பின்தங்கியிருந்தோம் என்று மேலும் கூறினார்.

இது குறித்து அவர் தனது ட்வீட்டில், "பிங்க் பால் டெஸ்டில் இந்தியாவிற்காக விளையாடியது நம்பமுடியாத அனுபவம். மொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டது. அன்புக்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றி. என்ன ஒரு அருமையான போட்டி" என கூறியுள்ளார்,

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!