உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் 240 ரன்களுக்கு இந்தியா ஆல் ஆவுட்

உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் 240 ரன்களுக்கு இந்தியா ஆல் ஆவுட்
இந்திய அணி வீரரின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடின.

லீக் போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய 9 அணிகளையும் வீழ்த்திய இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அரை இறுதி போட்டியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இதே போல இன்னொரு அரை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

இறுதி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் கம்மின்ஸ் தாங்கள் பீல்டிங் செய்வதாகவும் இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்துக் கொண்டார்.

இதனால் இந்திய அணிமுதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்கு பக்கபலமாக இருந்த சுப்மன்கில் 6ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனது அவருக்கு கை உடைந்தது போல் ஆனது. தொடர்ந்து 47 எண்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் சர்மாவும் கேட்ச் அவுட் ஆனார். கோலி 50 ரன்களை தாண்டிய நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் அவுட்டானார்.

இப்படி இந்திய அணி வீரர்களின் விக்கெட் வரிசையாக விழுந்து கொண்டே இருந்தது. இறுதியாக இந்திய அணி 50 ஓவரின் கடைசி பந்தில் ஆல் அவுட் ஆகி 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய வீரர்களின் பவுலிங் மிக சிறப்பாக இருந்ததால் இந்திய அணி வீரர்கள் ரன்களை குவிக்க முடியவில்லை. இது மைதானம் முழுவதும் கூடி இருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அந்த வகையில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story