சென்னையில் கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லப்போவது யார்?
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
இன்றைய ஆட்டத்தின் வெற்றி தொடரை வெல்வதற்கு மட்டுமல்ல, தரவரிசையில் இந்தியா 'நம்பர் ஒன்' இடத்தை தக்கவைப்பதற்கும் அவசியமாகும். அதே நேரம் டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலிய அணியினர் அதற்கு பதிலடியாக ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர்
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது . அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, நெரிசல் மிகுந்த நேரத்தில் வழங்கப்படும் மெட்ரோ ரயில் சேவை வழக்கமான நாட்களில் மாலை 5 முதல் இரவு 8 வரை இருக்கும். இந்த சேவை இன்று மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படவுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் கூறியுள்ளது .
இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் அல்லது வாஷிங்டன் சுந்தர், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர் அல்லது நாதன் எலிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu