ஜிம்பாப்வேக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டி இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றியது
ஜிம்பாப்வேக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைக்கொண்டாடும் வீரர்கள்.
ind vs zimbabwe 2 nd odi match
ஹராரே;ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இன்று நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது .டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.ஜிம்பாப்வே அணி தொடக்க வீரர்களாக களமிறங்கிய கைடானோ டகுட்ஸ்வானாஷே 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கையா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.சீரான இடைவெளியில் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். கேப்டன் ரெஜிஸ் சகாப்வா மற்றும் வெஸ்லி மாதேவெரே தலா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் சீன் வில்லியம்ஸ் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சீன் வில்லியம்ஸ் தீபக் ஹூடா பந்துவீச்சில் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியாவுக்கு இலக்கு 162 ரன்கள்
ind vs zimbabwe 2 nd odi matchபின்கள வீரர்களில் ரியான் 39 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.முதல் ஒருநாள் போட்டியை போலவே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே வீரர்கள் திணறினர். இறுதியில் ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சர்த்துல் தாகூர் 3 விக்கெட்களையும், சிராஜ், கிருஷ்ணா, அக்சர், குல்தீப், ஹூடா தலா 1 விக்கெட்களையும் கைப்பற்றினர்.இதையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
கேப்டன் ராகுல் 1 ரன்
ind vs zimbabwe 2 nd odi matchஇந்திய அணி பின் களமிறங்கிய இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல் 1 ரன்னில் அவுட்டாகி இந்திய ரசிகர்களை ஏமாற்றினார். . தவான் 33, இஷான் கிஷான் 6, சுப்மன் கில் 33 ரன் எடுத்தனர். தீபக் ஹூடா 25 ரன்னில் போல்டானார். இந்திய அணி 25 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 16 7ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சஞ்சு சாம்சன் (43), அக்சர் படேல் (6) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரை 2-0 என கைப்பற்றியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu