இந்தியா வெற்றி தொடருமா?- ஆசியக் கோப்பை கிரிக்கெட் :சூப்பர் 4 இந்தியா- பாக். அணி நாளை மோதல்
ind vs pakistan asisan cup super 4 match
ind vs pakistan asisan cup super 4 match
துபாய்:
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று விளையாடிய பாகிஸ்தான் -ஹாங்காங் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹாங்காங்கை 38 ரன்கள் மட்டுமே எடுக்க வைத்துபெரும் அதிர்ச்சியை கொடுத்தது பாக். அணி.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளதுஇந்நிலையில் நாளை நடக்க உள்ள சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுடன் மோதுகிறது பாக். அணி.
திடீரென காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகியதால் அவருக்கு பதிலாக அக்ஷர் படேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் பேட்டிங் பவுலிங்கில் சாதிப்பாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஜடேஜாவின் அனுபவம் அக்ஷருக்கு உண்டா? எனவும் ரசிகர்கள் ஒப்புமைப்படுத்தி பார்க்கின்றனர்.
ஏற்கனவே இந்தியாவுடன் மோதிய பாக் . அணி தோல்வியை தழுவியுள்ளதால் நாளைய போட்டியில் கொஞ்சம் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்அணி என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் இந்திய அணியானது 2 சுழற்பந்து வீச்சாளர்கள், மற்றும் 3 பாஸ்ட் பவுலர்களுடன் களமிறங்கியது. தற்போது துபாய் பிட்ச் ஆனது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பதால் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்ற சூழலே நிலவி வருகிறது.
ரவீந்திர ஜடேஜா ஒரு ஸ்பின்னராக மட்டுமல்லாமல், டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக உதவினார். இதுவே வெற்றிக்கு காரணமானது. ஆனால் அக்ஷர் பட்டேல், எந்தளவிற்கு பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது. ஒருவேளை அக்ஷர் பட்டேலின் பேட்டிங் சரியாக இல்லையென்றால், ரிஷப் பண்ட்-ஐ ப்ளேயிங் 11ல் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை.
ind vs pakistan asisan cup super 4 matchரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டாலும், இந்தியாவுக்கு சுழற்பந்துவீச்சில் அக்ஷர் பட்டேலும் கண்டிப்பாக தேவை. இவர்கள் இருவரையும் ஒரே அணியில் சேர்த்து விட்டால் வேறு வழியின்றி தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். எனவே இவர்கள் மூவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரியவில்லை. அனுபவ வீரர்கள் களமிறக்கினால்தான் இந்தியாவுக்கு சாதகம்.ஆனால் தினேஷ் கார்த்திக் இக்கட்டான நேரத்தில் கை கொடுத்து ஆடுவார் அவரையும் நீக்கினால் பாடு திண்டாட்டந்தான்... என்ன?
ஏற்கனவே நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்று போனதால் நாளை நடக்க உள்ள போட்டியில் வெற்றி பெற வேண்டும் என களத்தில் பாக்.அணி இறங்கும் என்பதால் பெரும் பரபரப்பாகவே நாளைய மேட்ச் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மேலும் ஞாயிறன்று போட்டி நடப்பதால் பலருக்கும் இது சாதகமாகவே உள்ளதால் இந்திய அணி அதிரடி காட்டி மீண்டும் வெற்றியை தக்க வைக்குமா? அனுபவ வீரர்களை களமிறக்கினால்தான் பாக். அதிரடியை சமாளிக்க முடியும் என்ற நிலையில் என்ன முடிவெடுப்பார் ரோகித் பொறுத்திருந்து பார்ப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu