India Vs Pakisthan இன்று மோதல்! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

India Vs Pakisthan இன்று மோதல்! ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
X
India Vs Pakisthan ஹாக்கிப் போட்டியில் இன்று பலப்பரிட்சை நடத்துகின்றன.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் லூக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான் அணி. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், பாகிஸ்தான் அணி இந்த ஆட்டத்தில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

7வது ஆசிய சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி தொடர் சென்னையில் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 6 ஆசிய அணிகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில் சீனா மட்டும் அடுத்த சுற்றுக்கான தகுதியை இழந்து வெளியேறியுள்ளது.

6 அணிகளும் தங்களுக்குள் 1 முறை மோத வேண்டும். 5 போட்டிகளில் யார் அதிக வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கிறார்களோ அவர்களே அடுத்த சுற்றை எட்ட முடியும்.

அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே இரண்டு அணிகள் தகுதி பெற்றுவிட்டன. இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், மலேசிய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 9 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் இருக்கிறது. அடுத்த இரண்டு இடங்களுக்காக தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய அணிகள் போராடுகின்றன.

ஜப்பான் அணிதான் இந்த தொடரிலிருந்து அடுத்து வெளியேறும் என்று கூறப்பட்டாலும், அடுத்து சீனாவுடனான ஆட்டத்தில் எளிதில் வென்று 5 புள்ளிகளைப் பெற்றுவிடும். இன்னொரு ஆட்டத்தில் மலேசியா - தென்கொரியா அணிகள் மோதுகின்றன. இதில் டிரா ஆனாலே தென்கொரியா உள்ளே வந்துவிடும்.

இதனால் பாகிஸ்தான் அணி குறைந்தபட்சம் டிரா செய்தாலும் அது மற்ற இரு ஆட்டங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும். இதனால் நிச்சயம் வென்றே ஆக வேண்டிய சூழலில் இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக கண்டு களிக்கலாம்.




Tags

Next Story
ai solutions for small business