Ind Vs Eng ODI: இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி

Ind Vs Eng ODI: இங்கிலாந்தை பந்தாடிய இந்திய அணி
X
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடந்தது .

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது

25.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணியில் பும்ரா 6 விக்கெட்டும்,ஷமி 3 விக்கெட்,பிரஷித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தியை பார்க்க

பின்னர் ஆடத்துவங்கிய இந்திய அணி சுலபமான இலக்கான 111 ரன்கள் என்ற இலக்கை 18.4 ஓவர்களின் அடித்து விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி பெற்றது.

ரோஹித் ஷர்மா 58 பந்துகளில் 5 சிக்ஸர் 7 பௌண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்தார். ஷிகர் தவான் 31 ரன்கள் எடுத்தார். ஆட்ட நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!