முதல் டி20 போட்டி: பாண்ட்யா அதிரடி - இந்தியா 208 ரன்கள் குவிப்பு

முதல் டி20 போட்டி: பாண்ட்யா அதிரடி - இந்தியா 208 ரன்கள் குவிப்பு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்று.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா கே எல் ராகுல் களமிறங்கினர். ரோஹித் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.

இந்திய அணி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ராகுலுடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தை ஆடினார். 11.5 ஓவர்களில் ஸ்கோர் 103 ஆக இருந்த போது 36 பந்துகளில் 3 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 55 ரன் குவித்த கே எல் ராகுல் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா எப்போதும் போல தனது அதிரடியை காட்டினார். சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த வீரர்கள் சோபிக்கவில்லை.

ஹர்திக் பாண்டியா30 பந்துகளில் 5சிக்ஸர் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் ஸ்கோர் அதிகரிக்க காரணமானார்.

20ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலிய அணியில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் இரண்டு , கேமரூன் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் ஆடத்துவங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

Tags

Next Story