பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் வெற்றி
இகா ஸ்வியாடெக்
Frecnh Open Tennis 2022: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் மற்றும் அமெரிக்காவின் கோகோ காப் ஆகியோர் விளையாடினர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் முதல் செட்டை 6-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். இதனால், அடுத்த செட்டில் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அமெரிக்க வீராங்கனை கோகோ தள்ளப்பட்டார்.
ஆனால், அந்த செட்டையும் ஸ்வியாடெக் எளிதில் கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-3 என்ற புள்ளி கணக்கில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்
இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 8 நிமிடங்களில் முடிந்து விட்டது.
Frecnh Open Tennis 2022: இந்த வெற்றி மூலம் 35 போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்த வீனஸ் வில்லியம்சின் சாதனையை ஸ்வியாடெக் சமன் செய்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu