Women's t20 world cup தென்னாப்பிரிக்க அணியை வெல்லுமா வங்கதேசம்?

Womens t20 world cup தென்னாப்பிரிக்க அணியை வெல்லுமா வங்கதேசம்?
X
ஒருவேளை தோற்றுவிட்டால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு போகும். பி பிரிவில் இங்கிலாந்து அணி வெல்லும்பட்சத்தில் அந்த அணியை நியூசிலாந்து எதிர்கொள்ளும்.

ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பைப் போட்டித் தொடரில் வங்க தேச அணி இன்று தென்னாப்பிரிக்க அணியை எதிர் கொள்ளவுள்ளது. இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஜெயித்தால் இங்கிலாந்து அணி அரையிறுதியில் நியூசிலாந்துக்கு பதில் தென்னாப்ரிக்காவுடன் மோதும்.

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பி பிரிவில் பங்கேற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் இலங்கை அல்லது தென்னாப்பிரிக்க அணியும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு பிரகாசம்.

பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 3 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து அணி இந்திய அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி அயர்லாந்து அணியைத் தோற்கடித்து அரையிறுதி சென்றது.

ஏற்கனவே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளை வென்று அந்த வெற்றியோடு களமிறங்கி இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வென்றிருந்தது. இந்திய அணியையும் அயர்லாந்தை வென்று 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சென்றது.

ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி எதிர் கொண்ட எல்லா அணிகளையும் வீழ்த்தி 4 வெற்றிகளுடன் முதல் இடத்தையும் அரையிறுதி வாய்ப்பையும் தன் வசப்படுத்திவிட்டது. இரண்டாவது இடத்துக்கே போட்டி அதிகமாக இருக்கிறது. இந்த ஆட்டத்தில் தென்னாப்ரிக்க அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பிடித்து பி பிரிவில் முதலிடத்தை பிடித்த அணியுடன் மோதும்.

ஒருவேளை தோற்றுவிட்டால், நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு போகும். பி பிரிவில் இங்கிலாந்து அணி வெல்லும்பட்சத்தில் அந்த அணியை நியூசிலாந்து எதிர்கொள்ளும்.

South Africa Women

L Wolvaardt, T Brits, S Luus(C), M Kapp, CL Tryon, D Tucker, S Jafta, N de Klerk, S Ismail, M Klaas, N Mlaba

தென்னாப்பிரிக்க பெண்கள்

எல் வால்வார்ட், டி பிரிட்ஸ்,எஸ் லூஸ், எம் காப், சிஎல் ட்ரையான், டி டக்கர், எஸ் ஜாப்ஃட்டா, என் டி க்ளெர்க், எஸ் இஸ்மாயில், எம் க்ளாஸ், என் லாபா

Bangladesh Women

Murshida Khatun, Sobhana Mostary, Sharmin Akhter, Shorna Akter, Salma Khatun, Ritu Moni, Rumana Ahmed, Nigar Sultana(C), Shamima Sultana, Nahida Akter, Fahima Khatun

பங்களாதேஷ் பெண்கள்

முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, ஷர்மின் அக்தர், ஷோர்னா அக்தர், சல்மா காதுன், ரிது மோனி, ருமானா அகமது, நிகர் சுல்தானா(சி), ஷமிமா சுல்தானா, நஹிதா அக்தர், ஃபஹிமா காதுன்

Tags

Next Story