Women's t20 world cup இங்கிலாந்து அணியை வெல்லுமா இந்தியா?

Womens t20 world cup இங்கிலாந்து அணியை வெல்லுமா இந்தியா?
X
சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் ஆட்டம் இன்று மாலை 6.30 மணிக்குத் துவங்குகிறது.

ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பைப் போட்டித் தொடரில் இந்திய அணி இன்று இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.

ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பி பிரிவில் பங்கேற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் இலங்கை அல்லது தென்னாப்பிரிக்க அணியும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு பிரகாசம்.

பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 2 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்திருக்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் வெல்பவர் முதலிடத்தை பிடிப்பார். பெரும்பாலும் இவ்விரு அணிகளும்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளை வென்று அந்த வெற்றியோடு இங்கிலாந்தை சாய்க்க திட்டமிட்டுள்ளது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வென்றிருக்கிறது.

சமபலம் கொண்ட இரு அணிகளும் மோதும் ஆட்டம் இன்று மாலை 6.30 மணிக்குத் துவங்குகிறது.

இங்கிலாந்து அணி விவரம் England Squad:

Heather Knight (c), Lauren Bell, Maia Bouchier, Alice Capsey, Kate Cross, Freya Davies, Charlie Dean, Sophia Dunkley, Sophie Ecclestone, Sarah Glenn, Amy Jones, Katherine Sciver-Brunt, Nat Sciver-Brunt, Lauren Winfield-Hill, Danni Wyatt.

ஹீதர் நைட் (கேப்டன்), லாரன் பெல், மியா பௌச்சியர், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டன்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், ஆமி ஜோன்ஸ், கேத்ரீன் ஸ்கிவர்-ப்ரண்ட், நாட் ஸ்கைவர்-ப்ரண்ட், லாரன் வின்ஃபீல்ட்- , டேனி வியாட்

இந்திய அணி விவரம் India Squad:

Harmanpreet Kaur (c), Smriti Mandhana (vc), Yastika Bhatia, Harleen Deol, Rajeshwari Gayakwad, Richa Ghosh, Shikha Pandey, Jemimah Rodrigues, Anjali Sarvani, Deepti Sharma, Renuka Singh, Devika Vaidya, Pooja Vastrakar, Shafali Verma, Radha Yadav.

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (து.கேப்டன்), யாஸ்திகா பாட்டியா, ஹர்லீன் தியோல், ராஜேஸ்வரி கயக்வாட், ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அஞ்சலி சர்வானி, தீப்தி ஷர்மா, ரேணுகா சிங், தேவிகா வைத்யா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாத் வர்மா, ஷஃபாலி வர்மா

Tags

Next Story