Women's t20 world cup இங்கிலாந்து அணியை வெல்லுமா பாகிஸ்தான்?

ஐசிசி பெண்கள் டி20 உலக கோப்பைப் போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணி இன்று இங்கிலாந்து அணியை எதிர் கொள்ளவுள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் இந்தியாவுக்கு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
ஐசிசி பெண்கள் டி20 உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பி பிரிவில் பங்கேற்றுள்ளது. இதே பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் முதல் பிரிவில் இடம்பெற்றிருக்கின்றன. ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மேலும் இலங்கை அல்லது தென்னாப்பிரிக்க அணியும் அவர்களுடன் செல்ல வாய்ப்பு பிரகாசம்.
பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 3 வெற்றிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து அணி இந்திய அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய அணி அயர்லாந்து அணியைத் தோற்கடித்து அரையிறுதி சென்றது.
ஏற்கனவே பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகளை வென்று அந்த வெற்றியோடு களமிறங்கி இங்கிலாந்திடம் வீழ்ந்தது இந்திய அணி. இங்கிலாந்து அணியும் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வென்றிருந்தது. இந்திய அணியையும் அயர்லாந்தை வென்று 3 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சென்றது.
இந்நிலையில், இன்று கடைசி நாள் லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டிகளில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஜெயித்தால் மட்டும் அரையிறுதி ஆட்டங்களில் மாற்றம் இருக்கும். இல்லையென்றால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியையும், இங்கிலாந்து அணி நியூசிலாந்தி அணியையும் எதிர் கொள்ளும்.
ஒருவேளை இங்கிலாந்து அணி படுமோசமாக தோற்று, பாகிஸ்தான் அணி வெல்லும் பட்சத்தில் ரன்ரேட் குறைந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தையும், இந்திய அணி முதலிடத்தையும் பிடிக்கலாம். ஆனால் இதற்கு வாய்ப்பு மிக மிக குறைவு என்றுதான் பார்க்கப்படுகிறது.
England Women (Playing XI): Sophia Dunkley, Danielle Wyatt, Alice Capsey, Nat Sciver Brunt, Heather Knight(c), Amy Jones(w), Katherine Sciver Brunt, Sophie Ecclestone, Charlotte Dean, Sarah Glenn, Lauren Bell
இங்கிலாந்து பெண்கள் (பிளேயிங் லெவன்): சோபியா டன்க்லி, டேனியல் வியாட், ஆலிஸ் கேப்ஸி, நாட் ஸ்கிவர் ப்ரண்ட், ஹீதர் நைட்(சி), ஆமி ஜோன்ஸ்(வ), கேத்ரீன் ஸ்கிவர் ப்ரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்
Pakistan Women (Playing XI): Bismah Maroof (c), Aiman Anwer, Aliya Riaz, Ayesha Naseem, Fatima Sana, Javeria Khan, Muneeba Ali (wk), Nashra Sandhu, Nida Dar, Omaima Sohail, Sadaf Shamas, Sadia Iqbal, Sidra Ameen, Sidra Nawaz (wk), Tuba Hassan
பாகிஸ்தான்: பிஸ்மா மரூஃப் (கேட்ச்), அய்மான் அன்வர், அலியா ரியாஸ், ஆயிஷா நசீம், பாத்திமா சனா, ஜவேரியா கான், முனீபா அலி (வாரம்), நஷ்ரா சந்து, நிடா தார், ஒமைமா சோஹைல், சதாப் ஷமாஸ், சாடியா இக்பால், சித்ரா அமீன், சித்ரா நவாஸ் (வாரம்), துபா ஹாசன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu