அகில இந்திய கிரிக்கெட் கவுன்சில்; ஐசிசி புதிய சேர்மனுக்கு நவம்பரில் தேர்தல்

மும்பை; அகில இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கான (ஐசிசி) புதிய சேர்மனுக்கான தேர்தலை நவம்பரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அப்ரூவலை ஐசிசி அளித்துள்ளதால் நவம்பரில் புதிய சேர்மன் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்மிங்காமில் நடந்த கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சேர்மன் கிரேக் பார்க்லே கடந்த இரண்டாண்டுகளுக்கு மு்ன்பாக அதாவது 2020ம் ஆண்டு நவம்பர் 24 ந்தேதி பொறுப்பேற்றார். அவருடைய இரண்டு வருட பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவடைவதால் ஐசிசி சேர்மனை புதியதாக தேர்ந்தெடுக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. தற்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் சேர்மனின் பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அதாவது டிசம்பர் 1 2022 முதல் 30 நவம்பர் 2024 வரை.
இத்தேர்தலைப் பொறுத்தவரை பெருவாரியான மெஜாரிட்டியை பெறவேண்டும் என்ற அவசியம் இல்லை. 51 சதவீத ஓட்டுகள் பெற்றாலே அவர்தான் சேர்மனாக பதவியேற்கலாம். மேலும் 16 மெம்பர் கொண்ட டைரக்டர்கள் குழுவில் 9 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபருக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும் அவரே சேர்மன் ஆவார். தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பொறுப்பிலுள்ள முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலியும் இத்தேர்தலில் போட்டியிட லாமென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் இந்திய இன்டர்நேஷனல் மற்றும் தற்போதைய நேஷனல் கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் மற்றும் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகிய இருவரும் ஐசிசியின் ஆண் கிரிக்கெட் வீரர்களுக்கான குழுவில் தற்போது விளையாடி வரும் வீரர்களுக்கான ஆலோகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கிரிக்கெட் அணி துவங்குவது குறித்து விரைவில் ஐசிசி குழு நேரில் சந்தித்து ஆலோசித்து விரைவில் முடிவினை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu