அடேங்கப்பா திட்டம் போட்ட பிசிசிஐ..! ஐசிசி உலக கோப்பையை தட்டி தூக்க நல்ல வாய்ப்பு!
ஐசிசி உலக கோப்பைத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில், இதனைப் பார்த்த ரசிகர்கள் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். அட்டவணை இந்தியாவுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும், இதன்மூலம் எளிமையாக அரையிறுதிப் போட்டிகளை எட்டமுடியும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரசிகர்களின் இந்த மகிழ்ச்சிக்கு காரணம் ஆட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ள நகரங்கள்தான். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான அணியாகும். அதுபோல இந்திய ஆடுகளங்களும் ஸ்பின்னுக்கு சாதகமானவையாகவே தயாரிக்கப்படும். அதேநேரம் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குறைந்த அளவே ஸ்பின்னர்கள் இருப்பார்கள். இதனால் இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்புகள் கூடுதலாக இருக்கும்.
உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற 8 அணிகளும், தகுதி சுற்று ஆட்டங்களின் மூலம் 2 நாடுகளும் ஆக மொத்தம் 10 அணிகள் உலக கோப்பையில் மோத இருக்கின்றன. அக்டோபர் மாதம் இந்த போட்டிகள் துவங்கி நடைபெற இருக்கின்றன.
பலம் வாய்ந்த அணிகளில் 4 மட்டுமே அரையிறுதிக்கு செல்லும். இதுபோல இந்திய அணி ஆடும் ஆட்டங்கள் எல்லாமே இந்திய அணிக்கு சாதகமான இடங்களில் நடைபெறுகின்றன.
இந்திய அணி சென்னையில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அதுபோல ஆப்கானிஸ்தானை டெல்லியிலும், நியூசிலாந்தை தர்மசாலாவிலும் எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுடனான போட்டி அகமதாபாத்திலும், புனேவில் வங்கதேசத்தையும் எதிர்கொள்கிறது. லக்னோவில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
இப்படி அனைத்து போட்டிகளுமே இந்தியாவுக்கு சாதகமான அதேநேரம் எதிரணிகள் எந்தெந்த மைதானத்தில் திணறும் என்பதை கணித்து அதற்கேற்ப திட்டமிட்டு போட்டிகளைத் தீர்மானித்திருக்கிறார்கள். எப்படியென்றாலும் இந்திய அணி சிறப்பாக விளையாடவேண்டும். சொந்த நாட்டில் இந்திய அணி சிறப்பாக ஆடி நிச்சயமாக உலக கோப்பையை கைப்பற்றும் என்கிறார்கள் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu