ஜிம்பாப்வேயில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு இந்திய வீரர்களுக்கு குளிப்பதற்கு கட்டுப்பாடு

India VS Zimbabwe -இந்திய கிரிக்கெட் அணியானது வெஸ்ட் இன்டீஸ் தொடரை முடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்து ஜிம்பாப்வே அணியுடன் மோத வலைப்பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுத்த நிலையில் இந்திய வீரர் கே.எல். ராகுல் தலைமையில் இளம்பட்டாளம் மட்டும் ஜிம்பாப்வேக்கு சென்றுள்ளது. இவர்களுக்கு பிசிசிஐ ஒருசில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது என்ன? நீங்க குளிக்கலாம்..ஆனா அதிக நேரம் தண்ணீரில் இருக்க கூடாது. எப்படி இருக்குது பாருங்க... அது சரி என்னன்னுதான் பார்ப்போமோ?
heavy water problem at zimbabweஜிம்பாப்வேவுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வேயில் 3 ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இம்மாதம் 18 ,20 மற்றும் 22 ம் தேதிகளில் நடக்கிறது.ஆசியக்கோப்பை இதற்கு பிறகு வருவதால் இந்திய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இத்தொடரானது கே..எல். ராகுல் தலைமையில் இளம் வீரர்கள் மட்டுமே களமிறக்க போகிறது இந்திய அணி. இதற்காக இளம் வீரர்கள் ஜிம்பாப்வே சென்று பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஆசியக்கோப்பையில் இடம் கிடைக்க பெரும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு
heavy water problem at zimbabweஇதற்காக இந்திய அணிவீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே ஜிம்பாப்வே சென்று விட்டனர். இருந்தாலும் அவர்களுக்கு அங்கு முழு சுதந்திரம் இல்லாத நிலை. அது என்னங்க? அதாவது பிசிசிஐ தரப்பிலிருந்து ஒரு சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீங்கள் ஹோட்டலில் குளிக்கலாம். ஆனால் அதிக நேரம் குளிக்க கூடாது. அதேபோல் ஸ்விம்மிங்பூஃல் செஷன்கள் எதுவும் கிடையாது என தடாலடியாக அறிவித்துள்ளது .
ஹராரேவில் ஹோட்டலில் தங்கியுள்ள இந்திய இளம் வீரர்களுக்குஇது அதிர்ச்சி செய்தியாக உள்ளது. காரணம் என்ன தெரியுமா? ஜிம்பாப்வேயிலும் தண்ணீர் தட்டுப்பாடுங்க. அன்றாட தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல்அந்த நாட்டுகுடிமக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.மேலும் ஒரு சில பகுதிகளில் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது. நாடே தண்ணீரில்லாமல் தத்தளிக்கும்போது நம்மாளுங்க மட்டும் கவலைப்படாம ஹாயா தண்ணீரை செலவழிப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் பிசிசிஐ அதிரடி சர்க்குலரை அனுப்பிவைத்துள்ளது. உலகம் முழுக்க எங்க சென்றாலும் நமக்கு தண்ணீர் வேணுமுங்க... ஏங்க நான் சொன்னது குளிக்கிற தண்ணியைதான். மற்ற ஏதும் நினைச்சுகாதீங்க...
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu