அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் 'பை.. பை' சொன்னார் ஹர்பஜன்!
பாஜி என்று அழைக்கப்படும் ஹர்பஜன் சிங், இது தொடர்பாக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதில், அனைத்து நல்ல விஷயங்களும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் வழங்கிய கிரிக்கெட்டிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன், 23 ஆண்டு கால அழகான, நினைவில் நிற்கும் பயணத்தில் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி என்று, தெரிவித்துள்ளார்.
கடந்த 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான, பெங்களூரு டெஸ்டில் , தனது 17 வயதில் ஹர்பஜன் சிங் அறிமுகமாகினார். ஒருநாள் போட்டியில் அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் ஷார்ஜாவில் நடந்த போட்டியில், நியூஸிலாந்துக்கு எதிராக களமிறங்கினார். அதேபோல், இருபது ஓவர் போட்டியில், 2006ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி ஜோகன்னஸ்பர்க் நகரில், தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிராக ஹர்பஜன் விளையாடினார்.
ஹர்பஜன் சிங் இதுவரை, 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 236 ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 2,224 ரன்களையும் அடித்துள்ளார்; இதில் 2 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டியில் 1237 ரன்களை ஹர்பஜன் சேர்த்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu