IPL 2023 ஹைதராபாத்தை பந்தாடிய குஜராத் அணி!

IPL 2023 ஹைதராபாத்தை பந்தாடிய குஜராத் அணி!
X
குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது

இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது ஹைதராபாத் அணி. இதனால் முதலில் குஜராத் அணியின் துவக்க வீரர்களாக சஹா மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். சஹா டக் அவுட் ஆக அடுத்து சாய் சுதர்ஷன் களமிறங்கினார்.

சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இருவரும் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சை வெளுக்க, ஸ்கோர் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பின் சாய் சுதர்ஷன் 36 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 8, டேவிட் மில்லர் 7, தெவாட்டியா 3, ரஷீத் கான், நூர் அகமது, முகமது சமி ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேற 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 188 ரன்கள் எடுத்தது.

புவனேஷ்வர்குமார் தன் பங்குக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜான்சென், பரூகி, நடராஜன் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் கிளாஸன் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களை எடுக்கவில்லை.

அன்மோல்ப்ரீத் சிங் 5, அபிஷேக் சர்மா 5, மார்க்ரம் 10, ராகுல் திரிபாதி 1, சன்விர் சிங் 7 , அப்துல் சமத் 4, ஜேன்சென் 3 என அவுட் ஆக, கிளாஸன் மட்டும் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

Tags

Next Story