GT Vs RR IPL 2023 ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி!

GT Vs RR IPL 2023 ஷிம்ரன் ஹெட்மயர் அதிரடியில் ராஜஸ்தான் வெற்றி!
X
179 ரன்களை எடுத்து குஜராத் அணியை வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

179 ரன்களை எடுத்து குஜராத் அணியை வீழ்த்தியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கேப்டன் சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது ராஜஸ்தான் அணி.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் செய்வதை விரும்பியது. இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக விருதிமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

விருதிமான் சஹா 3 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரை அடுத்து தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். சுப்மன் கில், சாய் இருவரும் சிறிது நேரம் நிலையாக நின்று ஆடினர்.

5வது ஓவர் வரை ஆடி வந்தவர்கள் அந்த ஓவரின் கடைசி பந்தில் சுதர்ஷன் விக்கெட்டை இழந்தனர். 19 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ஹார்டிக் பாண்டியா உள்ளே வந்தார். அடுத்த 5 ஓவர்களுக்கு இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11வது ஓவரின் 3வது பந்தில் ஹார்டிக் பாண்ட்யாவும் அவுட் ஆகி வெளியேற, அடுத்து டேவிட் மில்லர் களமிறங்கினார்.

சுப்மன் கில்லுடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டனர். அடுத்த விக்கெட் 16வது ஓவரில் விழுந்தது. சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரின் 2வது பந்தில் சுப்மன் கில் ஜோஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதனுடன் 4 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 121 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து அபினவ் மனோகர் களமிறங்கினார். அவர் 13 பந்துகளில் 27 ரன்களும் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 46 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். அடுத்து ரஷீத் கானும் 1 ரன்னில் ரன் அவுட் ஆக, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது குஜராத் அணி.

ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும், போல்ட், ஜாம்பா, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணியின் துவக்க வீரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆக, தேவ் தத் படிக்கல் 26 ரன்கள் எடுத்தார்.

சஞ்சு சாம்சன் மட்டும் நீண்ட நேரம் களத்தில் நின்று 32 பந்துகளில் 60 ரன்களை குவித்தார். அவரைத் தவிர ஷிம்ரன் ஹெட்மயர் வேற லெவலுக்கு இறங்கி ஆடினார். முன்னதாக ரியான் பராக் 5 ரன்களுக்கும் துருவ் ஜூரல் 10 பந்துகளில் 18 ரன்களுக்கும் அவுட் ஆகினர்.

ஜூரல் அவுட் ஆன நிலையில் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 3 பந்துகளில் 10 ரன்களை குவித்தார். ஷிம்ரன் ஹெட்மயர் 26 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு கூட்டிச் சென்றார்.

ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து இந்த ஆட்டத்தை வென்றது.

Tags

Next Story