GT vs RR ராஜஸ்தானை எளிதில் வீழ்த்தியது குஜராத்

சவாய் மன்சிங் உள் விளையாட்டு அரங்கில் இன்றைய தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டனஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் படுதோல்வியடைந்தது ராஜஸ்தான் அணி.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக கூறியது. இதனால் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கியிருந்தனர். ஆனால் இவர்களின் ஆட்டம் முந்தைய போட்டிகளைப் போல இப்போது கைக்கொடுக்கவில்லை.
இரண்டாவது ஓவரில் தனது முதல் விக்கெட்டை இழந்தது ராஜஸ்தான் அணி. இதுவரை வெளுத்து வாங்கி வந்த ஜோஸ் பட்லர் தனது விக்கெட்டை 8 ரன்களுக்கு இழந்தார். அடுத்து கடந்த ஆட்டத்தில் நன்றாக விளையாடிய ஜெய்ஸ்வால் 14 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் 30 ரன்களை எடுத்தார். ஆனால் அவரைத் தவிர மற்ற யாரும் பெரிய அளவு ரன்களைச் சேர்க்கவில்லை.
தேவ்தத் படிக்கல் 12 ரன்களில் அவுட் ஆனார். ரவிச்சந்திரன் அஸ்வின் 2, ரியான் பராக் 4, ஹெட்மயர் 7 என மூன்று விக்கெட்டுகளையும் ரஷீத் கான் தனது சுழலில் சுருட்டினார்.
நூர் அகமது தேவ்தத் படிக்கல், துருவ் ஜோயல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 20 ஓவர்கள் முழுசாக ஆட முடியாமல் 18வது ஓவரில் 1 பந்து மிச்சம் வைக்கப்பட்ட நிலையிலேயே ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது.
119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விருதிமான் சஹா, சுப்மன் கில் இருவரும் கிட்டத்தட்ட ஆட்டத்தை முடித்துவிட்டனர். 34 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விருதிமான் சஹா அவுட் ஆகாமல் இருந்தார். சுப்மன் கில் 36 ரன்களில் அவுட் ஆக, 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்ட ஹர்திக் இன்றைய நாளில் வெற்றிக்கான காரணமாக அமைந்துவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu