குஜராத் அணி சூப்பர் வெற்றி! 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது!

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. குஜராத்தை முதலில் பேட்டிங் செய்ய வைத்து அந்த ஸ்கோரை எளிதாக துரத்திவிடலாம் என்று கருதியது மும்பை. இதனால் குஜராத் அணியின் துவக்க வீரர்களான விருதி மான் சஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.
7 பந்துகளைச் சந்தித்த விருதிமான அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய பந்தை சரியாக கணிக்காமல் அடித்த அது இஷான் கிஷன் கையில் அகப்பட்டது. இதநால் 4 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அவருக்கு பிறகு சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஹார்திக் பாண்டியா. அவரும் ஆரம்பத்தில் கொஞ்சம் திணறி திணறி பேட்டிங் செய்தார். ஆனால் 14 பந்துகளுக்கு 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பியூஷ் சாவ்லா ஓவரில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து தமிழக வீரர் விஜய் ஷங்கர் களமிறங்கினார். அவர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கொஞ்சம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முன்னதாக கில் 34 பந்துகளுக்கு 56 ரன்கள் எடுத்திருந்தார். அவர் அவுட் ஆகி வெளியேறிய போது அணியின் ஸ்கோர், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் என இருந்தது. அடுத்து விஜய் சங்கர் அவுட் ஆக, டேவிட் மில்லர் மற்றும் அபினவ் இருவரும் நிலைத்து நின்று ஆடினர்.
டேவிட் மில்லர் 22 பந்துகளில் 46 ரன்களும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். ராகுல் தெவாட்டியா கடைசி நேரத்தில் 3 சிக்சர்களைப் பறக்க விட்டு தூள் கிளப்பினார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 207 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.
மும்பை அணி ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ரோஹித் சர்மா 8 பந்துகளைச் சந்தித்து 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். இஷான் 21 பந்துகளைச் சந்தித்து 13 ரன்கள் மட்டுமே குவித்தார். கேமரூன் கிரீன் 26 பந்துகளில் 33 ரன்களும்,
வதேரா 21 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர். இவர்களைத் தவிர மற்றவர்கள் சோபிக்கத் தவறினர்.
கடைசி 2 ஓவர்களுக்கு 69 ரன்கள் தேவை என்ற நிலையில் கையில 2 விக்கெட்டுகளை மட்டுமே வைத்துக் கொண்டு எதுவும் செய்ய இயலாத நிலையில் பரிதாபமாக தோற்றது மும்பை இந்தியன்ஸ் அணி.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை. இதனால் 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
IPL 2023 இன் அடுத்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போராட உள்ளன. GT vs MI மோதல் ஏப்ரல் 25 (செவ்வாய்) அன்று நடைபெறுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் இருக்கிறார்கள். GT மற்றும் MI இருவரும் இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 2ல் தோல்வியடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று 3ல் தோல்வியடைந்துள்ளது
கடந்த ஆட்டத்தில் குஜராத்
குஜராத் அணி தனது முந்தைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. குறைந்த ஸ்கோரிங் மோதலில், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் துவக்க வீரர் விருத்திமான் சாஹா (47), கேப்டன் ஹர்திக் பாண்டியா (66) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 135-6 ரன்களை குவித்தது. பின்னர களமிறங்கிய லக்னோ அணியை 128-7 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.
கடந்த ஆட்டத்தில் மும்பை
ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதிக ஸ்கோரிங் மோதலில், பஞ்சாப் அணி வீரர் சாம் குர்ரானின் 55 மற்றும் ஹர்பிரீத் சிங்கின் 41 ரன்களுடன் 214-8 என்ற மாபெரும் ஸ்கோரைப் பதிவு செய்தது. பின்னர், கேமரூன் கிரீன் (67) மற்றும் சூர்யகுமார் யாதவ் (57) ஆகியோர் அசத்தினாலும், MI கடைசி பந்து வரை களத்தில் நின்று 201-6 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது.
குஜராத் வீரர்கள் அடித்த ரன்கள் ஐபிஎல் 2023
சுப்மன் கில் - 228 ரன்கள்
விருதிமான் சஹா - 137 ரன்கள்
மும்பை வீரர்கள் அடித்த ரன்கள் ஐபிஎல் 2023
ரோஹித் சர்மா - 179 ரன்கள்
இஷான் கிஷன் - 170 ரன்கள்
கேமரூன் க்ரீன் - 166 ரன்கள்
மும்பை ஐபிஎல் 2023 இதுவரை
கடைசி 5 போட்டிகளில் இரண்டு தோல்விகளையும் 2 3 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
குஜராத் ஐபிஎல் 2023 இதுவரை
கடைசி 5 போட்டிகளில் இரண்டு தோல்விகளையும் 2 3 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
Gujarat Titans :
Wriddhiman Saha(w), Shubman Gill, Hardik Pandya(c), Vijay Shankar, David Miller, Abhinav Manohar, Rahul Tewatia, Rashid Khan, Mohammed Shami, Noor Ahmad, Mohit Sharma
குஜராத் டைட்டன்ஸ்:
விருத்திமான் சாஹா(வ), சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேட்ச்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா
Mumbai Indians :
Rohit Sharma(c), Ishan Kishan(w), Cameron Green, Suryakumar Yadav, Tim David, Nehal Wadhera, Kumar Kartikeya, Arjun Tendulkar, Riley Meredith, Piyush Chawla, Jason Behrendorff
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா(கேட்ச்), இஷான் கிஷன்(வ), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu