GT Vs KKR 2023 வெளுத்து வாங்கிய வெங்கடேஷ்! மிரள வைத்த ரஷீத் கான்! டுவிஸ்ட் வைத்த ரிங்கு!

GT Vs KKR 2023 வெளுத்து வாங்கிய வெங்கடேஷ்! மிரள வைத்த ரஷீத் கான்! டுவிஸ்ட் வைத்த ரிங்கு!
X
கடைசி ஓவரில் அதிரடி காட்டி வெற்றியைப் பறித்தார் ரிங்கு சிங். டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்!

கொல்கத்தா வீரர் வெங்கடேஷின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் வைத்த டார்கெட்டை நோக்கி படு வேகமாக முன்னேறியது கொல்கத்தா அணி. கடைசியில் ரிங்கு டுவிஸ்ட் வைத்து கொல்கத்தாவை வெற்றி பெற செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் சாய் சுதர்ஷன், விஜய் சங்கர் ஆகியோர் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர்.

ஐபிஎல் தொடரின் 13வது ஆட்டம் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மதியம் 3 மணிக்கு துவங்கியது. டாஸில் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தேர்ந்தெடுத்தது.

ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், இந்த போட்டியில் கேப்டனாக ரஷீத் கான் செயல்பட்டார்.

துவக்க வீரர்களாக குஜராத் அணியின் விருத்திமான் சஹா, சுப்மன் கில் களமிறங்கினர். சுனில் நரேன் பந்து வீச்சில் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். முதலில் 17 ரன்களில் ஆட்டமிழந்தார் சஹா. அடுத்து சுப்மன்னுடன் ஜோடி சேர்ந்தார் சாய் சுதர்ஷன்.

இந்த ஜோடி குஜராத் அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு கொண்டு சென்றது. அதே நேரம் 39 ரன்களை எடுத்திருந்த கில் அவுட் ஆனார். அடுத்து சுதர்சனுடன் அபினவ் ஜோடி சேர்ந்தார். 8 பந்துகளை சந்தித்திருந்த அபினவ் சுயாஸ் சர்மா பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து சாய் சுதர்சனுடன், மற்றொரு தமிழக வீரரான விஜய் சங்கர் சேர்ந்து ஆடி குஜராத்தின் ஸ்கோரை மிகப் பெரியதாக மாற்றினர். சாய் சுதர்சன் 53 ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் விஜய் சங்கர் நிலைத்து நின்று ஆடி 63 ரன்கள் எடுத்தார். ஆட்ட நேர முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணியின் ரஹமனுல்லா குர்பாஸ், நாராயணன் ஜகதீசன் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆரம்பத்தில் இரண்டு ஓவர்கள் மெதுவாக ஆடி இருவரும் அவுட் ஆனாலும் அடுத்து வந்த வெங்கடேஷ், நிதிஷ் ராணா இருவரும் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்தனர்.

வெங்கடேஷ் தான் சந்தித்த அனைத்து பவுலர்களையும் வெளுத்து வாங்கினார். 40 பந்துகளைச் சந்தித்திருந்த அவர் மொத்தம் 83 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் கொல்கத்தாவின் நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்தது.

ஹீரோவான ரஷீத் கான்

ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் எளிதாக கொல்கத்தா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்களே நினைத்திருப்பார்கள். கடைசி 5 ஓவரில் 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலைமையில், 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா. ஆனால் அல்ஸாரிஜோசப் ஓவரில் சுப்மன் கில் அவுட் ஆக, அடுத்து ரஷீத் கான் ஓவரில் ஆன்ட்ரே ரஸல், சுனில் நரேன், ஷர்துல் தாகூர் என அடுத்தடுத்து 3 டக்கவுட் களை நிகழ்த்தி ஹாட் டிரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்

இந்நிலையில் விளையாட்டே தலைகீழாக மாறிவிட்டது. கொல்கத்தா அணி தோல்வியைத் தழுவும் என கடைசி ஓவருக்கு சென்றது.

டுவிஸ்ட் வைத்த ரிங்கு

கொல்கத்தா அணியின் அனைத்து பேட்ஸ்மென்னும் அவுட் என்கிற நிலையில், இது குஜராத் அணிக்கு சாதகமான மேட்சாக மாறும் என அனைவரும் நினைத்தனர். அந்த நேரத்தில் அடித்து தூள் கிளப்பிய ரிங்கு சிங் வெற்றியை குஜராத்திடமிருந்து பறித்துவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!