CSK Vs GT முதல் போட்டியில் வெல்லப்போவது யார்?

CSK Vs GT முதல் போட்டியில் வெல்லப்போவது யார்?
X
CSK Vs GT முதல் போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இன்று முதல் துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர் கொள்கிறது. இந்த போட்டி இன்று மாலை துவங்க இருக்கிறது.

ஐபிஎல் 2023 போட்டித் தொடர் இன்று மாலை முதல் துவங்க இருக்கிறது. முதல் ஆட்டத்தில் 2010, 2011, 2018, 2021 என தோனி தலைமையில் 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொள்கிறது நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன். ஐபிஎல் 2022 சாம்பியனான குஜராத் அணி இம்முறை தோனி தலைமையிலான சென்னை அணியை எதிர் கொண்டு சீசன் துவக்கம் முதலே வெற்றியுடன் பயணிக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் சென்னை அணி சளைத்தது இல்லை. இம்முறை ருத்ராஜ், கான்வே, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயின் அலி என மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. மேலும் தோனியின் தலைமை இந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்கிறது. கூடவே பந்துவீச்சாளர்களுக்கு பலம் சேர்க்கும் வகையில் தீபக் சாஹரும் அணியில் சேர்ந்துள்ளார்.

மறுபக்கம் ஹர்டிக் பாண்டியா கடந்த ஆண்டு கோப்பையை வென்ற உற்சாகத்தில் அணியை வழிநடத்துவார். மேலும் இந்த அணியில் சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, மேத்யூ வேட், சாய் சுதர்சன், ரஷித்கான், முகமது ஷமி, அல்ஜாரி ஜோசப், விருத்திமான் சஹா என அணியின் பலம் வாய்ந்த வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்.


ஆடுகளம்

அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாகவே அமையும். டி20 போட்டி என்பதால் கூடுதல் பவுண்டரிகளுக்காக பிட்ச் தயார் படுத்தப்பட்டிருக்கும். நல்ல பேஸ் பவுலர்களுக்கு சாதகமானதாகவும் பிட்ச் மாறும். இரண்டாவது இன்னிங்க்ஸில் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமானதாக மாற வாய்ப்பிருப்பதால் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் எடுக்கும் அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


சென்னை - குஜராத் மோதல்

மொத்த ஆட்டம் - 2

சென்னை வெற்றி - 0

குஜராத் வெற்றி - 2


விளையாடும் வீரர்கள்

Gujarat Titans: Shubman Gill, KS Bharat (wk), Kane Williamson, Hardik Pandya (C), David Miller, Rahul Tewatia, Rashid Khan, R Sai Kishore, Alzarri Joseph, Yash Dayal, Mohammed Shami

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில், கே.எஸ்.பாரத் (வி.கே.), கேன் வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா (சி), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஆர் சாய் கிஷோர், அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், முகமது ஷமி

Chennai Super Kings: Devon Conway, Ruturaj Gaikwad, Ambati Rayudu, Ben Stokes, Moeen Ali, Ravindra Jadeja, MS Dhoni (c & wk), Dwaine Pretorius, Shivam Dube, Deepak Chahar, Simarjeet Singh

சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேட்ச் & டபிள்யூ), டுவைன் பிரிட்டோரியஸ், சிவம் துபே, தீபக் சாஹர், சிமர்ஜீத் சிங்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!