சீனாவில் நடந்த உலக வில்வித்தை போட்டியில் இந்தியாவிற்கு தங்க பதக்கம்
இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த திராஜ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ்
உலக வில்வித்தை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்து உள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் 14 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ்-1') தொடர் நடந்தது. ஆண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியா, இத்தாலி அணிகள் மோதின. இதில் திராஜ், தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ் அடங்கிய இந்திய அணி 5-1 என புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த இறுதி போட்டியில் இந்தியா, 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' தென் கொரியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 5-1 (57-57, 57-55, 55-53) என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
பெண்களுக்கான தனிநபர் 'ரீகர்வ்' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் தீபிகா குமாரி 6-0 என தென் கொரியாவின் நாம் சுஹ்யோனை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய தீபிகா 0-6 என தென் கொரியாவின் லிம் சிஹ்யோனிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
கலப்பு இரட்டையர் 'ரீகர்வ்' பிரிவு 3வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அன்கிதா பகத், திராஜ் ஜோடி 6-0 என மெக்சிகோவின் மதியாஸ், வாலன்சியா ஜோடியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu