French Open Tennis 2022: அரையிறுதிக்கு காஸ்பர் ரூட். மரின் சிலிச் தகுதி

French Open Tennis 2022: அரையிறுதிக்கு காஸ்பர் ரூட். மரின் சிலிச் தகுதி
X
French Open Tennis 2022: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதி ஆட்டத்திற்கு நார்வேயின் காஸ்பர் ரூட், குரோஷியா குரேஷிய வீரர் மரின் சிலிச் தகுதி பெற்றனர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 7-ம் நிலை வீரரான நாா்வேவின் காஸ்பர் ரூட் ,டென்மாா்க் வீரர் ஹோல்கர் ரூன்னும் மோதினா். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாா்வேவின் காஸ்பர் ரூட் 6-1 4-6 7-6(7-2) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவா் அரையிறுதிக்கு போட்டிக்கு தகுதி பெற்றார்

மற்றொரு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ரூப்லெவும் ,குரேஷிய வீரர் மரின் சிலிச்சும் மோதினா். இந்த ஆட்டத்தில் முதல் 4 செட்களில் இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றினா். வெற்றியை தீா்மானிக்கும் கடைசி செட்டும் டை பிரேக்கா் வரை நீடித்தது. குரேஷிய வீரரான சிலிக் 5-7 6-3 6-4 3-6 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil