பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் - ஜோகோவிச்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் - ஜோகோவிச்
X
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சிட்சிபாசும் (கிரீஸ்), 6-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி) மோதினர். 5 செட் வரை நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 6-3, 4-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த போட்டி 3 மணி 37 நிமிடங்கள் வரை நீடித்தது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், செர்பியாவின் ஜோகோவிச், ஸ்பெயினை சேர்ந்த ரபெல் நடாலை 3-6, 6-3, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதி போட்டி நாளை நடைபெறும்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!