கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் மட்டும் இலவச சிற்றுந்து வசதி

கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் மட்டும் இலவச சிற்றுந்து வசதி
X

பைல் படம்.

சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் இலவச சிற்றுந்து சேவை வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக நாளை ஒருநாள் இலவச சிற்றுந்து சேவை வழங்கப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இலவச சிற்றுந்து வசதியை இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த இலவச சிற்றுந்து சேவை நாளை 11:00 மணி ஒரு நாள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது . இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தருவார்கள். இதற்காகவே சென்னை மெட்ரோ இரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானம் வரை இலவசமாக சிற்றுந்து சேவை வசதியை நாளை காலை 11:00 மணி முதல் கிரிக்கெட் போட்டி முடியும்வரை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே செய்துள்ளது.

22-03-2023, அன்று மட்டும் மெட்ரோ இரயில் சேவை நெரிசல்மிகு நேரமான மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை உள்ள நெரிசல்மிகு நேரத்தை இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில், சென்னை மெட்ரோ இரயில் வாகனநிறுத்தும் இடங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். சென்னை பெருநகர மக்களும், கிரிக்கெட் ரசிகர்களும், பொதுமக்களும், மெட்ரோ இரயில் நிர்வாகம் செய்துள்ள இந்த வசதிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!