/* */

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டி : நியூசிலாந்து அணி டாஸ் வென்றது இங்கிலாந்து பேட்டிங்

டி20 உலக கோப்பை போட்டியில் இன்று முதல் இரை இறுதி போட்டி நடக்கிறது. டாசில் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதல் பேட்டிங் இங்கிலாந்து அணி ஆடுகிறது.

HIGHLIGHTS

டி20 உலக கோப்பை முதல் அரை இறுதி போட்டி : நியூசிலாந்து அணி டாஸ் வென்றது இங்கிலாந்து பேட்டிங்
X

டாசில் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்கிறது.

இந்த டி20 உலக கோப்பை போட்டியில் டாஸ் வெல்லும் அணியே போட்டியில் வெற்றிப் பெற்று வருகிறது. ஒரு அணியின் வெற்றிக்கு டாஸ் வெல்வது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி கடந்து வந்த பாதை

இங்கிலாந்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது . இங்கிலாந்து இப்போது முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து அணி பிரிவு 1- பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

சூப்பர் 12 சுற்றின் போது இங்கிலாந்து 5 போட்டிகளில் விளையாடியது. 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று 1ல் தோல்வியடைந்தது. 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதல் இடத்தைப் பிடிதது. இங்கிலாந்துடன், ஆஸ்திரேலியாவும் குரூப் 1ல் இருந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

குரூப் 2 வில் இரண்டாவது இடத்தை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் மோதி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியுடன் மட்டுமே வெற்றியை இழந்தது. குரூப் 2வில் 8 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது.

இந்து நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

T20 உலகக் கோப்பை 2021 இங்கிலாந்து அணி:

பேட்ஸ்மேன்கள்

ஈயோன் மோர்கன் (c), ஜேம்ஸ் வின்ஸ், சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன்

விக்கெட் கீப்பர்கள்

ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்

ஆல்ரவுண்டர்கள்

மொயீன் அலி, டாம் குரான், கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்

பந்துவீச்சாளர்கள்

ரீஸ் டாப்லி, அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து அணி வீரர்கள் விவரம்

பேட்ஸ்மேனகள்

கேன் வில்லியம்சன், மார்க் சாப்மேன், மார்ட்டின் கப்டில்

விக்கெட் கீப்பர்கள்

க்ளென் பிலிப்ஸ், டிம் சீஃபர்ட், டெவன் கான்வே

ஆல்ரவுண்டர்கள்

டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னர்

பந்துவீச்சாளர்கள்

டோட் ஆஸ்டில், டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, கைல் ஜேமிசன், இஷ் சோதி, டிம் சவுத்தி

இப்படி இரண்டு வலுவான அணிகள் மோதுகின்றன. பயிற்சி ஆட்டத்த்ல் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது என்பது குறிப்பட தக்கது.

Updated On: 10 Nov 2021 9:56 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  5. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  6. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு