/* */

FIFA உலகக் கோப்பை 2022: அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா

FIFA உலகக் கோப்பை 2022: லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றதால் அதிர்ச்சி

HIGHLIGHTS

FIFA உலகக் கோப்பை 2022: அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா
X

அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபியா

லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா சவூதி அரேபியாவுக்கு எதிராக 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியில் தடுமாறியது

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார்.

முதல் பாதியில், அர்ஜென்டினா சவுதி அரேபியாவுக்கு எதிராக பெனால்டியைப் பெற்றதைக் கண்ட லியோனல் மெஸ்ஸி அந்த இடத்திலிருந்து ஸ்கோரைத் தொடங்கினார். மெஸ்ஸி மற்றும் லாட்டாரோ மார்டினெஸ் இருவரும் ஆஃப்சைடு காரணமாக பல கோல்கள் மறுக்கப்படுவதைக் கண்டனர். இடைவேளையின் போது அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், பாதி நேரத்தில் ஆட்டத்தை தங்கள் கைகளில் இருந்து செல்ல விடாமல் செய்ததற்கு சவுதி அரேபியாவுக்கு பெருமை.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும், சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் சவுதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

Updated On: 22 Nov 2022 2:39 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்