/* */

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி வாய்ப்பை இழந்த ஸ்பெயின்

உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றில் ஸ்பெயினை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என வீழ்த்தி காலிறுதிக்கு தகுதிபெற்றது மொராக்கோ

HIGHLIGHTS

உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி வாய்ப்பை இழந்த ஸ்பெயின்
X

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் மொராக்கோ அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் அணியான ஸ்பெயின், 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ அணியை சந்தித்தது.

ஆரம்பம் முதலே ஸ்பெயின் அணியின் கட்டுப்பாட்டில் பந்து இருந்தாலும், மொராக்கோ அணியினர் அதிரடி ஆட்டம் மூலம் ஸ்பெயின் அணிக்கு அச்சுறுத்தல் அளித்தனர். 26வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்கோ அசென்சியோ அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. 33வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் மஸ்ராய் அடித்த வலுவான ஷாட்டை ஸ்பெயின் கோல்கீப்பர் தடுத்து நிறுத்தினார். இரு அணியினரும் கோல் அடிக்க தீவிரம் காட்டினாலும் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை.

கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு 'பிரிகிக்' வாய்ப்பு கிட்டியது. ஆனால், டேனி ஒல்மோ அடித்த பந்தை மொராக்கோ கோல்கீப்பர் யாஸ்சின் தடுத்து நிறுத்தினார்.

90 நிமிட ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமனில் முடிந்ததால் 30 நிமிடங்கள் கூடுதல் நேரமாக ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. எனவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கபட்டது. மொராக்கோ அணி தனது முதல் 4 வாய்ப்புகளில் மூன்றை கோலாக்கியது. அந்த அணியின் அப்டெல்ஹாமிட் சபிரி, ஹகிம் ஜியேச், அச்ராப் ஹகிமி ஆகியோர் தங்கள் வாய்ப்பை கோலாக்கினார். 3-வது வாய்ப்பில் பாத் பினோன் அடித்த பந்தை ஸ்பெயின் கோல் கீப்பர் தடுத்து நிறுத்தினார். ஸ்பெயின் அணியின் பாப்லோ சராபி பந்தை கோல் கம்பத்தில் அடித்து வீணடித்தார். கார்லோஸ் சோலெர், கேப்டன் செர்ஜியோ ஆகியோர் அடித்த பந்துகளை மொராக்கோ கோல்கீப்பர் தடுத்தார். தங்களது முதல் 3 வாய்ப்புகளிலும் கோல் அடிக்க முடியாமல் ஸ்பெயின் தோல்வியை தழுவியது. பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்றுமுதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

மூன்று கோல் அடித்த ரமோசை பாராட்டும் சக போர்ச்சுகல் வீரர்கள்

மற்றொரு நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர். முதல் பாதியில் பிரேசிலின் ராமோஸ் 17வது நிமிடத்திலும், பெப் 33-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் போர்ச்சுக்கல் அணி 2-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியிலும் போர்ச்சுக்கலின் அதிரடி தொடர்ந்தது. ராமோஸ் 51வது நிமிடத்திலும், ரபேல் கியூரியோ 55வது நிமிடத்திலும், ராமோஸ் 67வது நிமிடத்திலும், ரபேல் லியோ 92வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் சுவிட்சர்லாந்து சார்பில் 58வது நிமிடத்தில் மானுவல் அகாஞ்சி ஒரு கோல் அடித்தார். இறுதியில், போர்ச்சுக்கல் அணி 6-1 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை எளிதில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

கால்இறுதியில் மொராக்கோ அணி , போர்ச்சுகல் அணியை சந்திக்கும்

Updated On: 8 Dec 2022 3:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க