Fastest 50s ஐபிஎல்லில் அதிவேக அரைசதமடித்த வீரர்கள் யார் தெரியுமா?

ஐபிஎல் 2023 தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. வெற்றி தோல்விகளை முடிவு பண்ணும் ஆட்டங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதிரடி நாயகர்களின் வான வேடிக்கைகளைக் காண ரசிகர்கள் மைதானங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
ஒவ்வொரு அணியும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டி வருகின்றன. மின்னல் வேகத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்த வீரர்கள் தங்களை கைகளிலிருக்கும் பேட்களை ஆயுதங்களாகக் கொண்டு பந்துகளை அடித்து வெளுத்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பி தங்களின் ரன்களையும் அணியின் ஸ்கோரையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பாலான விக்கெட்டுகளையும் இழந்த பின்னும் ஒற்றை ஆளாக நின்று அணியை சுமக்கிறார் ஒரு வீரர். ஆரம்பத்திலேயே அதிரடியைத் துவக்கி விக்கெட்டுகளே விழாமல் வான வேடிக்கைகளை காட்டிக் கொண்டிருக்கின்றனர் ஒரு அணியின் இரு துவக்க வீரர்கள். தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு வீரர்களும் தங்களின் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வீரர்கள் வந்த வேகத்தில் கட கட என ரன் சேர்க்க திட்டமிட்டு அதனை செயல்படுத்தவும் தயங்காமல் இருக்கின்றனர். குறைந்த பந்துகளில் அரைசதம் என்பதை இலக்காக கொண்டு யாரும் விளையாட வில்லை என்றாலும் அணி இருக்கும் சூழ்நிலை கருதி அவர்கள் அடிக்கும் ரன்கள் அவர்களுக்கே சாதனைகளாகி நிற்கின்றன.
நிக்கோலஸ் பூரன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வீரராக நிக்கோலஸ் பூரன் வந்தாலே எதிரணி வீரர்கள் வியூகம் வகுக்க ஆரம்பித்துவிடுவார்கள். யார் பந்தில் இவரை அடிக்கவிடாமல் செய்யமுடியும் யார் பந்துக்கு இவர் அவுட் ஆவார் என யோசித்து பவுலர்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். நேற்று ஏப்ரல் 10 நடந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தார் பூரன். அவர் சந்தித்த 15 பந்துகளில் 50 ரன்களை எளிதாக கடந்தார். இதுவே இந்த ஆண்டின் மிக குறைந்த பந்துகளில் மிக அதிவேக அரைசதமாக பதிவாகியிருக்கிறது.
அஜிங்யா ரஹானே
சென்னை அணி ரஹானேவை எடுத்த போதே பலரும் இவரை வசைபாடினர். டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவார் என்று பலரும் புகார் கூறினர். இவருக்கு அடிக்கவே வராது என்று கூறியவர்களும் உண்டு. எதிர்பார்த்தபடிய இவரை பெஞ்சில் உட்கார வைத்தார்கள். அடுத்து 8ம் தேதி மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ரஹானே, அடி துவம்சம் செய்தார். வெறும் 19 பந்துகள் அரைசதத்தை கடந்தார். இது இரண்டாவது சாதனையாக பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாகூர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த ஷர்துல் தாகூர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 பந்துகளில் அரைசதம் அடித்தார். இது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
அடுத்த இடங்களான 4 மற்றும் 5 வது இடங்களில் முறையே விஜய் சங்கர் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் இருக்கிறார்கள். விஜய் சங்கர் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி சார்பில் 21 பந்துகளில் அரைசதமடித்தார். கைல் மேயரும் அதே பந்துகளில்தான் அரைசதமடித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu