ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சபதம் போட்ட ரசிகை கிண்டலுக்கு ஆளானர்

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சபதம் போட்ட ரசிகை கிண்டலுக்கு ஆளானர்
X
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் சபதம் போட்ட ரசிகை

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என ரசிகை போட்ட சபதம் மைதானத்தில் அனைவர் கனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஸ்டார் அந்தஸ்து அடைந்த அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. அதற்கு காரணம் கோலி, கெயில், டிவில்லியர்ஸ் என பல அதிரடி வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஆர்சிபி அணிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஆனால், இத்தனை இருந்தும் இதுவரை ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பை வாங்கியது இல்லை. இதன் காரணமாக விராட் கோலி தனது கேப்டன் பதவியையே இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆர்சிபி அணி புத்த்புது தோற்றம் மற்றும் புதிய கேப்டனுடன் ஐபிஎல் 15வது சீசனில் களமிறங்குகியது. பேட்டிங், பந்துவீச்சு என மிரட்டுவதால், புதிய கேப்டனான டுபிளஸிஸ், இம்முறை கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி அணியின் தாரகமந்திரமான ஈ சாலா கம் நம்தே, இம்முறையாவது நிறைவேறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்

இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆர்சிபி லீக் ஆட்டத்தில் ரசிகை ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக பெண்கள், விராட் கோலி ஐ லவ் யு , என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்று தானே பதாகையில் எழுதி ஏந்தி காட்டுவார்கள். ஆனால் இங்கு ஒரு பெண் சபதம் போட்டுள்ளார். அதாவது, ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லாத வரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று அந்த பெண் பதாகையில் எழுதியுள்ளார். தற்போது அந்த பெண், சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆர்சிபி அணியை பிடிக்காத பலரும் அந்த பெண்ணை கலாய்த்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!