யூரோ கால்பந்துக்கான இறுதி போட்டிகள் - இத்தாலி கோப்பையை தட்டிச் சென்றது

யூரோ கால்பந்துக்கான இறுதி போட்டிகள் - இத்தாலி கோப்பையை தட்டிச் சென்றது
X
யூரோ கால்பந்துக்கான இறுதி போட்டியில் மிகவும் வலுவான இங்கிலாந்து இத்தாலி அணிகள் மோதிய ஆட்டம் தொடங்கியதில் இருந்து மைதானத்தில் தீ பிடிக்காத குறைதான்.

யூரோ கோப்பை கால்பந்து இத்தாலி கோப்பையை தட்டிச் சென்றது

ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான். நேற்று காலை பிபா அமெரிக்க கோப்பைக்கான கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றது.

கால்பந்து உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்களாக திகழும் பிரேசிலும் அர்ஜெண்டினாவும் பைனலில் மோதியது. இந்த இரு அணிகளும் இறுதிச்சுற்றில் மோதிக்கொள்வது மிகவும் அபூர்வமான ஒன்றாகும். இதனால் கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. போட்டிகள் கடும் விறுவிறுப்பாக நடந்த போதிலும் பிரேசில் வீரர் நெய்மரின் அதிரடி ஆட்டத்தை மீறி அர்ஜென்டினா வீரர் மெசி அர்ஜென்டினா நாட்டுக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்த ஆட்டமே மிகவும் பரபரப்பாக இருந்தது.

இதற்கிடையில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு லண்டனில் மீண்டும் ஒரு அதிரடி ஆட்டம் நடைபெற்றது. இதனை கண்டு களிக்க இங்கிலாந்து இளவரசர் தனது மனைவி மகனுடன் வந்திருந்தார்.

யூரோ கால்பந்துக்கான இறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் மிகவும் வலுவான இங்கிலாந்து இத்தாலி அணிகள் மோதிய ஆட்டம் தொடங்கியதில் இருந்து மைதானத்தில் தீ பிடிக்காத குறைதான் அவ்வளவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்டு வீரர்களும் பம்பரமாக சுழன்று ஆடினர். அரங்கமே நிரம்பி வழிந்தது கோப்பை எப்படியும் இங்கிலாந்துக்கு தான் என்று பலர் கூறினாலும் இத்தாலியின் ஆட்டம் அபாரமாக இருந்தது முதல் 45 நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இங்கிலாந்து தனது வெற்றி சரித்திரத்தை தொடங்கியது. முதல் 45 நிமிடம் வரை இத்தாலியால் கோல் அடிக்க முடியவில்லை.

போட்டியானது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்தாலும் அரங்கம் முழுவதும் தலைவர்களே ஆக்கிரமித்து இருந்தார்கள். ஆட்டத்தின் பின்பகுதியில் வெறித்தனமாக களமிறங்கிய இத்தாலி வீரர்கள் ஒரு கோல் அடித்தனர். இதனால் இருவரும் 1:1 என்ற சம நிலைக்கு வந்தனர். இதனால் ஆட்டம் இன்னும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இத்தாலி வீரர்களின் ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இத்தாலி அணியின் மின்னல்வேக ஆட்டம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 90 நிமிடம் வரை இரண்டு மணிநேரமே தலா ஒரு கோல் இந்த கணக்கில் சமநிலையில் இருந்ததால் எக்ஸ்ட்ரா டைம் ஆக 6 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் எந்த அணியும் போது போடவில்லை.

மீண்டும் 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது அதிலும் எந்த அணியும் போல் போட முடியாத வாறு கோல்கீப்பர்கள் கடுமையாக முட்டுக்கட்டை போட்டார்கள். எனவே மேலும் ஒரு 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. இதிலும் யாரும் கோல் போட முடியவில்லை. இதையடுத்து மேலும் மூன்று நிமிடம் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இதிலும் யாரும் கோல் போட முடியவில்லை என்பதால் பெனால்டி கிக் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.


இத்தாலி கேப்டன் சீலினி இங்கிலாந்து கேப்டன் ஹரிக்கேன் கைகுலுக்கி ஆட்டம் தொடங்கியது. இதில் இத்தாலி 3 கோல் அடித்தது. இங்கிலாந்து 2 மட்டுமே அடித்தது. ஆகையால் இத்தாலி யூரோ கோப்பையை வென்றது. இங்கிலாந்து மண்ணில் இத்தாலி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டம் வழக்கம்போல கோலாகலமாக நடந்தது. அதன் பின்னர் நடந்த நிகழ்ச்சியில் இத்தாலிக்கு யூரோ கோப்பை வழங்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!