இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சரிவிலிருந்து மீண்ட நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சரிவிலிருந்து மீண்ட  நியூசிலாந்து
X
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் 2-வது இன்னிங்சில் சரிவை சமாளித்து நியூசிலாந்து முன்னிலை பெற்றது

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு நியூசிலாந்து பவுலர்கள் பதிலடி கொடுத்தனர். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. ஒரே நாளில் மொத்தம் 17 விக்கெட்டுகள் சரிந்தன. இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி அடுத்த 7 ஓவருக்குள் எஞ்சிய 3 விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 42.5 ஓவர்களில் 141 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 43 ரன்கள் எடுத்தார். எக்ஸ்டிரா வகையில் அந்த அணிக்கு 22 ரன்கள் கிட்டியது. நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், கைல் ஜாமிசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 9 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்துக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் வில் யங் 1 ரன்னிலும், டாம் லாதம் 14 ரன்னிலும் நடையை கட்டினர். கேப்டன் வில்லியம்சன் (15 ரன், 34 பந்து) முதல் இன்னிங்ஸ் போலவே புதுமுக வேகப்பந்து வீச்சாளர் மேத்யூ போட்சின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரது பந்து வீச்சில் 'ஸ்லிப்'பில் நின்ற பேர்ஸ்டோவிடம் பிடிபட்டார். டிவான் கான்வேவும் (13 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அப்போது அந்த அணி 56 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.

இந்த சூழலில் 5-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த டேரில் மிட்செல்லும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல்லும் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 236 ரன்கள் சேர்த்து, மொத்தம் 227 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மிட்செல் 97 ரன்களுடனும், பிளன்டெல் 90 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tags

Next Story
பிஸிக்ஸ், தொழில்நுட்பத்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பதை தெரிஞ்சிக்கலாம் வாங்க