டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணி சாம்பியன்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இங்கிலாந்து அணி சாம்பியன்
X
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, 'சூப்பர்12' சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து இந்தியாவையும் வென்று இறுதிபோட்டிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

தொடக்க வீரர்களான பாபர் அசாம் ,முகமது ரிஸ்வான் தொடக்க விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஸ்வான் 15 ரன்களில் ,சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்நது களமிறங்கிய முகமது ஹாரிஸ் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷான் மசூத் அதிரடி காட்டினார். மறுபுறம் நிலைத்து ஆடி ரன்கள் குவித்த பாபர் அசாம் 32 ரன்களில் அவுட்டானார்

இப்திகார் அகமது ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. சிறப்பாக விளையாடிய ஷான் மசூத் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஷதாப் கான் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட் இழப்பிற்கு 137ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் 2 ,சாம் கரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 138ரன்கள் எடுத்தால் டி20 உலகக்கோப்பையை வெல்லலாம் என்ற நிலையில் இங்கிலாந்து அணி ஆடத் தொடங்கியது

முதல் ஓவரிலேயே இங்கிலாந்திற்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தியாவை துவம்சம் செய்த தொடக்க ஆட்டக்காரர் ஹேல்ஸ் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சால்ட் 10 ரன்களின் அவுட்டானார். அடுத்து விளையாடிய பட்லர் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்,

பின்னர் ஸ்டோக்ஸ், ப்ரூக் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்த நிலையில் ப்ரூக் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.ஹாரி புரூக்கை வெளியேற்ற ஒரு அற்புதமான கேட்சை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் அஃப்ரிடி காயம் காரணமாக ஆடுகளத்தை வெளியேறினார்

15 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணை 97 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. 16 வது ஓவரின் இப்திகார் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் ஒரு சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாசினார் . 17 வது ஓவரில் மொய்ன் அலி அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது,

19வது ஓவரில் அதிரடியாக விளையாடி வந்த மொயின் அலி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்

இங்கிலாந்து அணி 19 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது இங்கிலாந்து அணி வெல்லும் 2வது டி20 உலகக்கோப்பை ஆகும்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!