இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்

இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்
X

பென் ஸ்டோக்ஸ் கேன் வில்லியம்சன் 

ENG Vs NZ Test: இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடக்கம்

ENG Vs NZ Test இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 17 டெஸ்டில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலக, புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பொறுப்பேற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜோரூட் 111 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் 10 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார்.

ENG Vs NZ Test நியூசிலாந்து அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஐ.பி.எல். போட்டி முடிந்து தற்போது தான் லண்டன் வந்திருப்பதால் அவர் முதலாவது டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நியூசிலாந்து அணி 18 டெஸ்டில் விளையாடி ஒன்றில் மட்டுமே (1999-ம் ஆண்டில்) வெற்றி பெற்றுள்ளது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு