/* */

தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

தூர்தர்ஷன் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலியில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

HIGHLIGHTS

2021 டி-20 உலகக் கோப்பை தொடங்கவிருக்கும் நிலையில், பிரசார் பாரதி நெட்வொர்க் அதை முழுமையாக ஒளி(லி)பரப்பவுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தை கருத்தில் கொண்டு, நேரடி போட்டிகள், வானொலி வர்ணனை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 'மெகா கவரேஜை', தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி திட்டமிட்டுள்ளன.

அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், அகில இந்திய போட்டிகள், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி டிடி ஸ்போர்ட்ஸ் அலைவரிசையில் டிடி ஃபிரீடிஷில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அக்டோபர் 23 முதல், அகில இந்திய வானொலி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அனைத்து போட்டிகளின் நேரலை வர்ணனையை ஒலிபரப்பும்.

தூர்தர்ஷனில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை காண்பதை மிகவும் உற்சாகமான அனுபவமாக மாற்றும் விதத்தில், மக்கள் பங்கேற்புடன் கூடிய பல நிகழ்ச்சிகளை டிடி ஸ்போர்ட்ஸ் திட்டமிட்டுள்ளது. 'கிரிக்கெட் லைவ்' என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியில், சாதாரண மக்கள், கேப்டனின் நிலையில் இருந்து முக்கிய முடிவுகளை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

'ஆர்ஜேஸ் கா கிரிக்கெட் ஃபண்டா' என்பது மற்றொரு சுவாரசியமான விவாத நிகழ்ச்சியாகும். இதில் அகில இந்திய வானொலி ஜாக்கிகள், கிரிக்கெட் நிபுணர்களுடன் இணைந்து டிடி ஸ்போர்ட்ஸில் பொதுமக்களுடன் உரையாடுவார்கள். தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒருங்கிணைப்பின் சிறந்த உதாரணமாகவும், புதுமையாகவும் பிரசார் பாரதியின் இந்த முன்முயற்சி இருக்கும்.

Updated On: 8 Oct 2021 10:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...