பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் : முதல் சுற்றில் டோமினிக் திம் அதிர்ச்சி தோல்வி
X

ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம்

பிரெஞ்சு ஓபன் போட்டியில்முன்னணி வீரர் ஆஸ்திரியாவின் டோமினிக் திம் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி.

இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் ஜூன் 5-ந் தேதி வரை நடக்கிறது.

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னணி வீரரான டோமினிக் திம் (ஆஸ்திரியா) அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

இரண்டு முறை பிரெஞ்சு ஓபன் போட்டியில் இறுதி சுற்று வரை தகுதி பெற்றுள்ள திம், நேற்று நடைபெற்ற ஆட்டத்தல் முதல் சுற்றில் பொலிவியாவின் ஹ்யூகோ டெலியனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஹ்யூகோ டெலியன் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டோமினிக் திம்-மை வீழ்த்தினார். இது டொமினிக் தீமின் தொடர்ச்சியான 10-வது தோல்வியாகும்

முன்னணி வீரர் டோமினிக் திம் முதல் சுற்றிலே வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!