லக்னோ அணிக்கு எதிராக பவுலிங்கில் அசத்தும் சென்னை!
ஐபிஎல் 2023 தொடரின் 45வது ஆட்டத்தில் சென்னை அணி லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள இருக்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். முன்னதாக டாஸ் போட கொஞ்சம் தாமதமானது. லக்னோவில் கனமழை பெய்து வந்த காரணத்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீரர்களாக மனன் வோரா மற்றும் கைல் மேயர்ஸ் களமிறங்கினர். மனன் வோரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கைல் மேயர்ஸ் கொஞ்சம் அதிரடியாக ஆட முயற்சி செய்தார். 2 பவுண்டரிகளை அடித்தவர் அடுத்த பந்தை எகிறி அடிக்கும் முயற்சியில் தூக்கி விட்டார்.
17 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த அவர் மொயின் அலி பந்துவீச்சில் ருத்துராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
4வது ஓவரில் 18 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது லக்னோ அணி. அடுத்து வோராவுடன் கரண் ஷர்மா களமிறங்கினார். இவரும் எதிர்பார்த்தபடி நிதான ஆட்டத்தையே தொடர்ந்தார்.
6 வது ஓவரில் தீக்ஷனா வீசிய பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார் வோரா. அவர் 11 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தார். அவரைத் தொடர்ந்து இன்றைய போட்டியின் கேப்டன் குருணால் பாண்டியா களமிறங்கினார். அடுத்த பந்திலேயே அவரும் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார்.
பவர்ப்ளே முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்திருந்தது.
ஐபிஎல் 2023
இதுவரை இரண்டு அணிகளும் 9 போட்டிகளில் விளையாடி, 5 போட்டிகளில் வெற்றியும், 4 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறிச் செல்லும்.
நேருக்கு நேர் CSK vs LSG HEAD TO HEAD
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையேயான நேருக்கு நேர் பதிவு தற்போது 1-1 என்ற கணக்கில் உள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் 2022 இல் ஒருமுறை சந்தித்தன, அதிக ஸ்கோரிங் த்ரில்லரில் எல்எஸ்ஜி முதலிடம் பிடித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே முன்னேறியது.
பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தில் எல்.எஸ்.ஜி மற்றும் சி.எஸ்.கே அணிகள் மோதிய முதல் போட்டி இதுவாகும். எனவே, லக்னோவில் இரு தரப்புக்கும் இடையிலான நேருக்கு நேர் பதிவு 0-0 என்ற கணக்கில் உள்ளது.
அவர்களின் முந்தைய போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்தது, அதே சமயம் ஐபிஎல் 2022 இல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒரே ஆட்டம் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
CSK vs LSG அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல்
ஷிவம் துபே 2 ஆட்டங்களில் ஆடி மொத்தம் 76 ரன்கள் எடுத்துள்ளார்
குயின்டன் டி காக் 1 ஆட்டத்தில் விளையாடி 61 ரன்கள் எடுத்துள்ளார்.
கேஎல் ராகுல் 2 ஆட்டங்களில் விளையாடி 60 ரன்கள் எடுத்துள்ளார்.
CSK vs LSG அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்
ரவி பிஸ்னாய் 2 ஆட்டங்களில் விளையாடி மொத்தம் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
மொயின் அலி இதுவரை 2 ஆட்டங்களில் ஆடி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
துஷார் தேஷ்பாண்டே 2 ஆட்டங்களில் விளையாடி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu