CSK Vs MI மும்பை இந்தியன்ஸ் அணியில் தோனி? இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

CSK Vs MI மும்பை இந்தியன்ஸ் அணியில் தோனி? இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?
X
தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கடைசி தொடர் இதுவாகத் தான் இருக்கும். அதனால்தான் கடந்த முறை ஜடேஜா கேப்டனாக இருந்த போதிலும் இப்போது தோனியை கேப்டனாக வைத்திருக்கிறார்கள்.

அநேகமாக தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கடைசி தொடர் இதுவாகத் தான் இருக்கும். அதனால்தான் கடந்த முறை ஜடேஜா கேப்டனாக இருந்த போதிலும் இப்போது தோனியை கேப்டனாக வைத்திருக்கிறார்கள். இந்த தொடர் முடிந்த பிறகு, அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் தோனி என்ன செய்வார்?

ஐபிஎல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் துவங்கியது. அந்த ஆண்டே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல் துவங்கிவிட்டது. ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சச்சினை முக்கிய வீரராக எடுத்துக் கொண்டது. ஆனால் அப்போது சென்னை அணிக்கு நட்சத்திர வீரர் யாரும் இல்லை. அவர்கள் நேரடியாக ஏலத்திலேயே தோனியை எடுத்தனர். அந்த ஆண்டு தோனி தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர்.

அந்த ஏலத்தில் கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் தோனி இப்போது மும்பை இந்தியன்ஸ் ஜெர்ஸி போட்டு விளையாடிக் கொண்டிருந்திருப்பார். ஒருவேளை ரோஹித்துக்கு பதில் அவரே கேப்டனாகவும் இருந்திருக்கலாம்.

எல் கிலாஸிக்கோ என்று ஒன்றைக் கூறுவார்கள். வழக்கமாக மிகவும் பரம்பரை முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளை இப்படி அழைப்பது வழக்கமாகிவிட்டது. சார்பாட்டா பரம்பரை இடியாப்ப பரம்பரை போட்டிகள் போல, மாக்கான்ஸ், பல்தான்ஸ் சண்டைகள் டிவிட்டரில் நடந்து வருகிறது.

சென்னை அணிக்கு சப்போர்ட் செய்பவர்களுக்கு மும்பை அணியை சுத்தமாக பிடிக்காது. மும்பை ரசிகர்களுக்கு சென்னை அணியை சுத்தமாக பிடிக்காது. இப்படி ஒரு பகை இருவருக்கும். எந்த காரணமும் இல்லை. வெறும் போட்டியில் உருவான காரணம்தான்.

முதன் முதலில் தோனியை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சேப்பாக்கம் மைதானத்தில் ஆடியது. முதலில் பேட்டிங் செய்தது சென்னை அணி. அப்போது 200 ரன்களுக்கு மேல் அடிப்பது அதுவும் வெறும் 20 ஓவர்களில் என்பது மிகப் பெரிய விசயமாக இருந்தது. அதனை சென்னை அணி முதலில் பிரித்து மேய்ந்தது. 209 ரன்கள் அடித்தால் வெற்றி என மும்பை சேஸிங்கைத் துவங்கியது. ஆனால் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை இழந்தது மும்பை.

இதன் பிறகு இரு அணிகள் எப்போது மோதினாலும் அந்த போட்டி பலருக்கும் ஹாட் பீட்களை எகிறச் செய்யும் போட்டியாகவே அமைந்திருந்தது. தோனி, ரோஹித் யாராவது ஒருவர் பயங்கரமாக விளையாடுவார். நிச்சயமாக மற்ற போட்டிகளில் சுமாராக ஆடினாலும் பார்மில் இருக்கிறாரோ இல்லையோ சென்னைக்கு எதிராக வெறித்தனமாக ஆடி அரைசதம் அடிப்பார் ரோஹித். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ரோஹித் சற்று சோர்ந்துவிட்டார் என்பது சென்னை ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.

ஆனால் இந்த முறை நிச்சயம் வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் தனது பழைய பாஃர்முக்கு வருவார் என்றும் மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் பேசி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!