சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை துறந்தார் தோனி: தொடர்ந்து விளையாடுவாரா?

சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை துறந்தார் தோனி: தொடர்ந்து விளையாடுவாரா?
X
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் தோனி, திடீரென விலகியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள், நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, மகேந்திர சிங் தோனி, திடீரென விலகி உள்ளார்.

ரவீந்திர ஜடேஜா - தோனி.

இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கேப்டன் பொறுப்பை தோனி ஒப்படைக்க முடிவெடுத்ததுடன், அப்பொறுப்புக்கு ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். 2012 முதல் சென்னை அணிக்கு விளையாடி வரும் ஜடேஜா, சென்னை அணியை வழிநடத்தும் மூன்றாவது வீரராக இருப்பார். அதேநேரம் இந்த சீசனிலும் அதற்கு பிறகும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி தொடர்ந்து விளையாடுவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகள்தொடங்கியது முதல், ஜார்க்கண்ட் வீரரான தோனி, சென்னை அணியில் விளையாடி வருகிறார். சென்னை அணிக்கு, தோனி இதுவரை நான்கு கோப்பைகளை வென்று கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி இருப்பது, சி.எஸ்.கே. ரசிகர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!