தோனிக்கு கேப்டனாக200 வது போட்டி .. ஐபிஎல் சாதனை பட்டியலில் இடம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவராக தோனி களமிறங்குகிறார். இந்த ஆட்டத்தின் மூலம் மிகப் பெரிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். இந்த ஆட்டத்தை இரவு 7.30 மணி முதல் காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபில் தொடரில் விளையாடத் துவங்கிய நாளிலிருந்து தோனிதான் கேப்டனாக இருந்திருக்கிறார். இடையிடையே ரெய்னாவும், கடந்த ஆண்டு ஜடேஜாவும் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். எனினும் சிஎஸ்கே கேப்டன் என்றால் அது தோனிதான். இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக களமிறங்கவுள்ளார் மகேந்திர சிங் தோனி.
ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும் ஒரு அணிக்கு 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தது இல்லை. சென்னை அணியைத் தவிர புனே அணிக்கும் இவர் கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த அணியில் விளையாடும் வீரர்கள் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கு ஏலம் மூலம் கொடுக்கப்பட்டனர். அந்த வகையில் 14 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200வது போட்டியில் தலைமை தாங்கி ஆடும் கேப்டன் எனும் பெருமை தோனிக்கு கிடைத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 236 போட்டிகளில் தோனி விளையாடியிருக்கிறார். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜடேஜா கேப்டனாக செயல்பட்ட நிலையில், அவருக்கு கீழே சாதாரண வீரராக களமிறங்கி விளையாடினார் தோனி. இதுவரை 213 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள தோனி அதில் 125 வெற்றிகளையும் 87 தோல்விகளையும் சந்தித்துள்ளார். நான்கு முறை ஐபிஎல் கோப்பையையும் கைப்பற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டனும் தோனிதான்.
இன்றைய ஆட்டத்தில் வென்று அதை தோனிக்கு பரிசாக கொடுக்க போகிறோம் என ஜடேஜா தெரிவித்துள்ளார். தோனி சென்னை அணிக்கு மட்டும் கேப்டன் அல்ல ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் கேப்டன் என்று கூறிய ஜடேஜா இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டார் எனவும், மொயின் அலி உடல் நலம் சரியாகிவிட்ட நிலையில் விளையாட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu