டெல்லி அணி வெற்றி! 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது!

டெல்லி அணி வெற்றி! 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது!
X
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சாம் கரண் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினர்.

முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட்டே இழக்காமல் ஆடிய டெல்லி அணியின் முதல் விக்கெட்டாக டேவிட் வார்னர் ஷிகர் தவானிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் ரிலி ரஸ்ஸவ். அதிரடியாக விளையாடிய அவர் 6 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என விளாசினார். இதனால் ரன் வேகம் உயர்ந்தது. 37 பந்துகளில் 82 ரன்களும், பில் சால்ட் 14 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 213 ரன்கள் எடுத்தது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக பிரப்சிம்ரன்சிங் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் டக் அவுட் ஆகி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அடைந்தார். பிரப்சிம்ரன் சிங் 4 பவுண்டரிகளையும் 19 பந்துகளில் 22 ரன்களையும் எடுத்தார்.

அடுத்ததாக வந்த அதர்வா டைடே அதிரடியாக விளையாடினார். 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். அதன் பிறகு களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் முடிந்த வரை தனி ஆளாக போராடினார். இறுதி வரை போராடி கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

20 ஓவர்களில் பஞ்சாப் அணியால் 198 ரன்களே எடுக்க முடிந்தது. லியாம் லிவிங்ஸ்டன் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்திருந்தார். மற்றவர்கள் பெரிய ஸ்கோர் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!