அதிரடியாக ஆடி முதல் வெற்றியை ருசித்த மும்பை அணி!

மும்பை அணி வெற்றி பெற 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
ஐபிஎல் 2023 சீசனின் 16வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்டு வருகிறது. டெல்லி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.
டெல்லி அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர், பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே நிதான ஆட்டத்தை கையிலெடுத்த வார்னரும் பிரித்வி ஷாவும் ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு வந்தனர்.
4 வது ஓவரில் ஷோகீன் பந்து வீச்சில் கேமரூன் க்ரீன் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பிரித்வி. இவருக்கு பிறகு மனிஷ் பாண்டே வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் கொஞ்சம் நேரம் நிலைத்து நின்று ஆடினார்கள். 33 ரன்களிலிருந்து இவர்கள் இருவரும் 76 ரன்களுக்கு அணியை தூக்கி செல்லும் வழியில், 9வது ஓவரில் அவுட் ஆனார் மனிஷ் பாண்டே.
பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் பெரெண்டார்ஃபிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து யாஷ் துல்லும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அவர்
நேஹல் வதேராவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
பியூஸ் சாவ்லா பந்து வீச்சில் அடுத்தடுத்து ரோமன் பவல், லலித் யாதம் ஆகியோர் அவுட் ஆகி வெளியேற, அக்ஸார் படேல் களத்துக்கு வந்தார்.
டேவிட் வார்னர், அக்ஸார் படேல் இருவரும் டெல்லி அணிக்கு நல்ல ஸ்கோரை கொண்டு வந்தனர். 25 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவர் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 47 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின்னர் போட்டி அப்படியே விழுந்துவிட்டது. டெல்லி அணியால் அதற்கு பிறகு 10 ரன்கள் கூட அடிக்க முடியவில்லை.
19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி 172 ரன்களை எடுத்துள்ளது. இதன்மூலம் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தங்களது முதல் இன்னிங்ஸைத் துவங்கியது மும்பை அணி. மும்பை அணி தொடக்கம் முதலே அதிவிரைவு ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது.
ரோஹித் சர்மாவும், இஷான் கிஷனும் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில், ரன் அவுட் முறையில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார் இஷான். அவர் 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா.
கடந்த ஆட்டத்தில் சென்னை அணிக்கு எதிராக 18 பந்துகளில் இவர் எடுத்த 22 ரன்கள் அணியின் ஸ்கோரை உயர்த்த பயனுள்ளதாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.
ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். கிட்டத்தட்ட 24 போட்டிகளுக்கு பிறகு ஐபிஎல்லில் அரை சதம் அடித்திருக்கிறார் ரோஹித் சர்மா.
அதன்பின்னர் முகேஷ் குமார் வீசிய ஓவரில் திலக் வர்மா அவுட் ஆனார். 29 பந்துகளை சந்தித்திருந்த அவர் 41 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆனார். அவருக்கு பிறகு வந்த சூர்யகுமார் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியே கிளம்பினார்.
டிம் டேவிட், கேமரூன் கிரீன் இருவரும் ஆளுக்கொரு சிக்ஸர் அடிக்கவே, கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலைக்கு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.
இந்த நிலையில் கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தனர். இரண்டாவது பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த பந்திலும் ரன் எடுக்கவில்லை. இப்போது 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 4வது பந்தில் 1 ரன் எடுத்தனர். 5 வது பந்தில் ஒரு ரன் எடுக்க ஓடும்போது ரன் அவுட் ஆக வாய்ப்பு கிடைத்ததை மிஸ் செய்தார்கள். கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்கவேண்டும். லாவகமாக தட்டிவிட்டு இரண்டு ரன்கள் ஓடி வெற்றியை கைப்பற்றியது மும்பை அணி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu